Sunday, 12 October 2014

திருவடிப் பாதுகை

 

         திருவடிப் பாதுகை 


                பல்லவி

      திருவடியே சரணமெனத் கேசவனைப் பணிந்து

        திருவடிப்பாதுகையை  மனமாரத்துதித்தேன் 

                 அனுபல்லவி
     
        திருவடியைச் சேர்ந்திடவே திருவடிச் சரண் புகுந்தேன்

        திருவடியை அடைவிக்கும் திருவடியைத் தொழுதேன்    
 
                      சரணம்

          திருவடியின் புகழுரைத்துத்   திருவடியே போற்றி

         திருவடித் தாமரையே மறைப் பொருளென்றுணர்ந்து

         திருவடியே துணையென்று  திருப்பாதம் பணிந்து

         திருவடியே கதியென்று  திருவடியைப் பற்றி



திருவடியை நாரணனைக்கேசவனைப் பரஞ்சுடரை,
திருவடிசேர் வதுகருதிச் செழுங்குருகூர்ச் சடகோபன்,
திருவடிமே லுரைத்ததமிழ் ஆயிரத்து ளிப்பத்தும்,
திருவடியே அடைவிக்கும் திருவடிசேர்ந் தொன்றுமினே.

           

No comments:

Post a Comment