காய்சின வேந்தன்
பல்லவி
காய்சின பறவையின் மீதமர்ந்த கேசவனை
காய்சினவேந்தனை மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
ஆய்ச்சியரளித்த வெண்ணையை உண்ட
வாய்ச்சுவை கொண்ட கண்ணனை மாதவனை
சரணம்
பேய்ச்சியின் முலையுண்ட கோகுலபாலனை
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை
தீயெனத் திகழும் கருடன் மீதேறி வந்து
மாயமாய் கரிக்கபயம் அளித்த மாலனை
No comments:
Post a Comment