பாலன் முகுந்தன்
பல்லவி
நீலவண்ணனை கண்ணனைக் கேசவனை
பாலனை முகுந்தனை மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
கோலக் குழலூதி ஆநிரை மேய்த்தவனை
பாலக்ருஷ்ணனை கோபியர் லோலனை
சரணம்
காளிங்கன் தலை மீது நடம்புரிந்த பாலனை
மேலுலகோரும் இந்திரனும் பணிந்தேத்தும்
ஞாலமுண்டவாயனை ஆலிலை துயின்றவனை
தாளினைப் பணிவோர்க்குப் பிள்ளைவரம் தருபவனை
மழலை வரமும் சகல பாக்கியங்களும் பெற...
இந்தீவரஸ்யாமள கோமளாங்கம்
இந்த்ராதி தேவார்ச்சித பாதபத்மம்
ஸந்தான கல்பத்ரும மாஸ்ரிதானாம்
பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி
-பால முகுந்தாஷ்டகம்.
பொதுப் பொருள்: நீலோத்பல மலரின் நிறம் கொண்டவரே! கிருஷ்ணா, நமஸ்காரம். பேரழகு கொண்ட சரீரம் பெற்றவரே, இந்திரன் முதலான தேவர்களால் பூஜிக்கப்பட்ட அழகு பாதங்களை உடையவரே, நமஸ்காரம். விரும்பி வேண்டுவோருக்கு புத்திர பாக்யம் அருள்பவரே, கற்பக விருட்சம் போல் பக்தர்களுக்கு அனைத்து பாக்கியங்களையும
No comments:
Post a Comment