Wednesday, 8 October 2014

திருவரங்கம் (இன்று)


                        திருவரங்கம்  (இன்று)


                                    பல்லவி 

                       திருவரங்கனை மனமாரத்துதித்தேன் 

                       பெரும் பிணி பவக்கடல் கடந்திட உதவிடும் 

                                      அனுபல்லவி 
                       
                       கருத்தினைக் கவர்ந்திடும் அழகிய கேசவனை 
   
                        கரும்பென இனித்திடும் நாமமுடையவனை 
                        
                                        சரணம் 

                     சீருந்தும் பேருந்தும் சீறிப் பாய்ந்து செல்லும்

                     தார்சாலைகள்  சூழ்ந்த  மண்டபங்களுள்ளே

                     இருபுறம் விரித்திருக்கும் கடைகள் நிறைத்திருக்கும்

                     திருவரங்கம் தனில் பள்ளி கொண்டிருக்கும்





1. திருவரங்கம் என்னும் ஸ்ரீரங்கம் (அன்று)

இரும்பனன் றுண்ட நீரும்
போதருங் கொள்க, என்றன்
அரும்பிணி பாவ மெல்லாம்
அகன்றன என்னை விட்டு
சுரும்பமர் சோலை சூழ்ந்த
அரங்கமா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டென்
கண்ணினை களிக்கு மாறே
-திருக்குறுந்தாண்டகம் 13.

எந்நேரமும் வண்டுகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் அழகிய
சோலைகள் சூழ்ந்த அரங்கத்தில் பள்ளிகொண்ட கரும்பாகிய என்
அரங்கனைக் கண்ட மாத்திரத்தில், சூடான இரும்பில் பட்ட நீர் எவ்வாறு
வேகமாக உட்கவரப்பட்டு காணாமல் போகிறதோ அதுபோல், என்
பாவமெல்லாம் என்னைவிட்டு பறந்தோடிவிட்டது என்று
திருமங்கையாழ்வாரால் பாடிப் பரவசித்து மங்களாசாசனம் செய்யப்பட்ட
இத்தலம் இன்றைய இந்தியாவிலேயே மிகச் சிறப்பான தலமாகும்.





                      

No comments:

Post a Comment