Thursday, 2 October 2014

எழில்மிகு கணபதி


         எழில்மிகு  கணபதி 


          பல்லவி

      எழில் மிகு கணபதியை ஏகதந்தனை

       விக்ன விநாயகனை மனமாரத் துதித்தேன்

              அனுபல்லவி

         மொழி மதமினங்களுக்கு அப்பாற் பட்டவனை

          அழிவில்லாதவனைக்  கேசவன் மருகனை

                           சரணம்

            பழி பாவம் செய்து பாழ் நரகக் குழியில்

            விழும்படிச்செய்திடும் வீணரை அணுகாமல்

            விழிகளில் அருள் காட்டி பக்தரையெல்லாம் 

             வழி காட்டி நடத்திடும் ஆனைமுகத்தோனை 
         
            

No comments:

Post a Comment