பூசை
பூசை என்றால் தமிழில் "அடி " என்றும் பொருள் உண்டு ! அதைப் பூஜைப் படத்தில் முழுமையாகப் பயன் படுத்தியுள்ளனர் ! சில காட்சிகளில் ஹீரோ காமேடியனையும் மற்றும் பல காட்சிகளில் மற்ற பாத்திரங்களையும் வில்லனையும் சகட்டு மேனிக்கு அடிக்கிறார். எல்லா காட்சிகளிலும் சத்தம் காதைத் துளைக்கிறது . சத்தத்தின் அளவு (டெசிபல்) இவ்வளவுதான் இருக்கலாமென்று ஒரு அளவுகோல் எதுவும் சினிமாப் படங்களுக்கு கிடையாதோ!படம் முழுவதும் காதுக்குள் ஓசை புகுந்து மிகவும் கொடுமைப் படுத்தியது . மற்றபடி ஸ்ருதிஹாசன் அதிக பட்ச அங்க லாவண்யகளைக் காட்டி அழகு சேர்த்திருக்கிறார்! விஷாலும் நடிக்க முயற்சித்திருக்கிறார் ! பூசை நிறைய ஓசை !
No comments:
Post a Comment