குழந்தைக் கடவுள்
பல்லவி
வெள்ளை மனம் கொண்டவனை வினைகள் தீர்ப்பவனை
பிள்ளையாரப்பனை மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
பிள்ளைகள் முதல் பெரியோர் தேவர்கள் முனிவர்கள்
கொள்ளைப் பிரியமுடன் போற்றி வணங்கிடும்
சரணம்
கள்ளமில்லா உள்ளம் படைத்தவனைக் கரிமுகனை
உள்ளன்புடன் பணியுமடியார்க்கருள்பவனை
கள்ளத்தனம் செய்த கேசவன் மருகனை
எள்ளளவும் பகையில்லா குழந்தைக் கடவுளை
குழந்தைகளின் தெய்வம்...
வீதியில் மணியோசை கேட்டால், ஆஹா! யானை வருது! என்று பிள்ளைகள் மகிழ்ச்சியுடன் ஓடுவர். யானையின் கம்பீரமான தோற்றம், வளைந்த துதிக்கை, நீண்ட பெரிய காதுகள் காண்பவரை ஈர்க்கும். விநாயகருக்கு வெள்ளை மனமும், பிள்ளை குணமும் மிகவும் பிடிக்கும். குழந்தை முதல் பெரியவர் வரை யாவரும் விரும்பும் ஒரே தெய்வம் இவர். படிக்கும் குழந்தைகளின் இஷ்ட தெய்வமாகவும் விளங்குகிறார். தேர்வை தடையின்றி எழுத உதவுபவர். குழந்தைகளுக்கு பிடித்த மோதகத்தை (கொழுக்கட்டை) விரும்பிச் சுவைப்பவர்
No comments:
Post a Comment