அணியரங்கன்
பல்லவி
அரங்கனை அழகனை ஆதிகேசவனை
அரவிந்த நாபனை மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
பரம பதம் வைகுண்டமென்றுலகோரழைத்திடும்
அரங்கமானகரில் அரவணையில் பள்ளிகொண்ட
சரணம்
சரணடைந்தோர்க்கருளும் தீனசரண்யனை
அரங்கநாயகி தங்கும் திருமார்பனை
பரந்தாமனைப் பாற்கடல் வாசனை
அறவோர் துதித்திடும் ஸ்ரீமன் நாராயணனை
No comments:
Post a Comment