செந்தில் நாதன்
பல்லவி
செந்தில் நாதனை சேவற்கொடியோனை
செந்தூர்த் தலத்தில் மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
சந்திர வதனமும் சூரிய ஒளியும்
சுந்தர வடிவும் கொண்ட சிங்கார வேலனை
சரணம்
இந்திரன் மகளை மணம் புரிந்தவனை
கந்தனைக் கடம்பனைக் கேசவன் மருகனை
முந்தைய பழவினைப் பயன்கள் தொலைந்திட
சிந்தையில் வைத்து சேவடி போற்றி
No comments:
Post a Comment