மரகதவல்லி
பல்லவி
மரகத வல்லியை மனமாரத் துதித்தேன்
சரணடைந்தோரைக் கனிவுடன் காத்தருளும்
அனுபல்லவி
பரந்தாமன் கேசவன் விஜய ராகவனின்
பரந்த மணிமார்பில் வீற்றிருப்பவளை
சரணம்
பிரமனும் நாரதரும் சுகசனகாதியரும்
நரர்சுரருமிந்திரனும் கரம்பணிந்தேத்தும்
பரம தயாகரியை பாற்கடலருளிய
திருமகளை அலைமகளை மகாலக்ஷ்மியை
No comments:
Post a Comment