கணபதிக்கு காலை வணக்கம்
பல்லவி
காலை வணக்கம் சொன்னேன் கணபதியே
காலைப்பிடித்துனை காத்தருள வேண்டுமென
அனுபல்லவி
வேலைப்பிடித்தவன் சோதரனே கரிமுகனே
ஆலிலை துயின்ற கேசவன் மருகனே
சரணம்
நூலை எழுத வியாசருக்குதவிய
பாலசந்திரனே பக்தரைக் காப்பவனே
சூலம் தனையேந்தும் சங்கரன் மகனே
ஞாலம் தனைக் காக்கும் ஞான சூரியனே
No comments:
Post a Comment