வினை தீர்க்கும் கோவிந்தன்
பல்லவி
கோடி வினைதீர்க்கும் கோவிந்தன் நாமமே
பாடித் திரிந்தேன் பரவசத்துடனே
அனுபல்லவி
நாடித்துதித்திப்பவர் பங்கிலுறைபவன்
வேடிக்கை செய்திடும் மாமாயன் கேசவன்
சரணம்
ஆடியாடி அங்கம் கரைந்து
வாடித்துதித்து திருவடி பணிந்து
ஈடிணையில்லா தேவாதி தேவனை
தேடிக்கண்டு கொண்டேன் திருவேங்கடம் தன்னில்
No comments:
Post a Comment