அப்போதைக்கிப்போதே சொல் !
பல்லவி
இப்போதே அவன் நாமம் நாவார உரைத்திடுவோம்
எப்போது நம் காலம் முடியுமென நாமறியோம்
அனுபல்லவி
தப்பித் தடுமாறித் தள்ளாத வயதில்
செப்பிடமுடியாமல் தடுமாறும் நிலை வருமுன்
சரணம்
ஒப்புவமையில்லாத மலையப்பன் கோவிந்தன்
முப்போதும் நமக்கருள காத்திருக்கும் வேங்கடவன்
தப்பேதுமில்லாத முத்தப்பன் முனியப்பன்
இப்பிறப்பில் நமைக்காக்கும் கலியுக வரதன்
வைத்த நாள்வரை எல்லை குறுகிச்சென்று,
எய்த்தி ளைப்பதன் முன்னம் அடைமினோ,
பைத்த பாம்பணை யான்திரு வேங்கடம்,
மொய்த்த சோலைமொய் பூந்தடம் தாழ்வரே.
(Swamy Nammazhwar)
Before your numbered days are spent, before old age saps your strength, reach for the lotus feet of Venkatam, the Lord of hooded serpent bed.
No comments:
Post a Comment