கண்ணனே என் தாய்
எட்டுத்திக்கும் புகழ் விளங்கும் கண்ணனே என் அன்னை
மட்டிலா மகிழ்வுடனே அரவணைத்துக் காத்திடுவான்
அனுபல்லவி
எட்டெழுத்திறைவன் கட்டழகு மேனியன்
துட்ட அரக்கரை வதைத்திடும் கேசவன்
சரணம்
பொட்டு வைத்துப் பூ முடித்து கட்டி முத்தமிட்டு
தொட்டு மடிவைத்து சங்கால் பாலூட்டி
பட்டு மெத்தைப் பாய்விரித்து பையக் குழலூதி
தொட்டிலிட்டுப் பாட்டிசைக்க வருவான் கண்ணன்
கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்
No comments:
Post a Comment