Tuesday, 7 October 2014

குங்கும கணபதி


          குங்கும கணபதி 


              பல்லவி

          அங்கம் முழுவதும் குங்குமம் பூசிய

          துங்கக் கரிமுகனை மனமாரத் துதித்தேன்

               அனுபல்லவி

          திங்கள் பிறை யணிந்த ஆனைமுகத்தோனை

          பங்கய பதத்தானைக்  கேசவன் மருகனை

                 சரணம்

           எங்கும் நிறைந்திருக்கும் ஏகதந்தனை

           பொங்கரவணிந்த சங்கரன் மகனை

            இங்குமங்குமலைபாயும் மனக்குரங்கை யடக்கி

            பொங்கும் மூவாசைப் பிணிதனைக் களைந்திட

         

         


No comments:

Post a Comment