பரம பதம்
பல்லவி
மனத்திலுன் மணதூணைப் பற்றி மகிழ்ந்தேன்
பரமபதம் சேர அரங்கனே எனக்கருள்வாய்
அனுபல்லவி
கனவிலும் நினைவிலும் உனது திருநாமமே
மனமாரத்துதித்துன் திருவடியே நினைந்து
சரணம்
அனந்தசயனனே அரங்கத்தம்மானே
அனங்கனைப் படைத்தவனே ஆதிகேசவா
வினதையின் புதல்வனை வாகனமாய்க் கொண்டவனே
தனம் புகழ் பதவி எதுவும் வேண்டேன்
No comments:
Post a Comment