வேளுக்கை அழகியசிங்கன்
பல்லவி
ஆசையுடன் வீற்றிருக்கும் அழகிய சிங்கனை
நேசமுடன் வணங்கி மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
பாசமிகு அம்ருதவல்லி மனங்கவர் கேசவனை
தேசுடைய மூர்த்தியை முகுந்தநாயகனை
சரணம்
ஈசனும் பிரமனும் தேவரும் முனிவரும்
காசினியோரனைவரும் கரம்பணிந்தேத்தும்
மாசிலாமணியை வேளுக்கை நாதனை
யாசித்தெனையே ஆண்டருள வேண்டுமென
No comments:
Post a Comment