கூத்தனூர் சரஸ்வதி
பல்லவி
ஆயகலைகள் அறுபத்து நான்கினையும்
நேயமுடன் எனக்களிக்கும் கலைமகளைத் துதித்தேன்
அனுபல்லவி
தூய வெண் கலையுடுத்தி வெண்கமல மலரமரும்
தேயாத புகழ் மேவும் சரஸ்வதியை பாரதியை
சரணம்
நாயகியாய் கேசவன் மணிமார்பில் வீற்றிருக்கும்
தாய் மகாலக்ஷ்மியும் மலைமகளும் நேசிக்கும்
தூயவளை அயன்மனையை தேவர் முனிவர் பணி
மாயையை கூத்தனூர் தலம் வளர் தேவியை
No comments:
Post a Comment