மகாவிஷ்ணு
பல்லவி
திருமாலைக் கேசவனை தீன சரண்யனை
கருணா மூர்த்தியை மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
தருமநெறி காக்க அவனியிலவ தரித்த
திருவேங்கடமுடையானை ஆராவமுதனை
சரணம் (1)
சாந்தமூர்த்தியை மகாவிஷ்ணுவை
அரவணை துயிலும் பதும நாபனை
மேகவண்ணனை அழகிய மேனியனை
உலகினைத்தன் வசம் வைத்திருப்பவனை
சரணம்(2)
திருமகள் மார்பனை கமலக்கண்ணனை
தவயோகியர் தம் மனத்திலிருப்பவனை
பவபயம் தீர்ப்பவனை பரமதயாளனை
கலியுக வரதனை உலகநாதனை
No comments:
Post a Comment