காரமடை நஞ்சுண்டேச்வரர்
பல்லவி
நஞ்சுண்டேச்வரனை நமச்சிவாயனை
அஞ்செழுத்தானை மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
தஞ்சமடைந்தவர்க்கு தயவளிக்குமீசனை
கஞ்சனைக் காய்ந்த கேசவன் நேசனை
சரணம்
அஞ்சனம் தீட்டிய உலக நாயகியின்
நெஞ்சம் கவர்ந்த நீலகண்டனை
புன்சிரிப்பால் புரமெரித்த நெற்றிக்கண்ணனை
அஞ்சலென்றபய கரம் நீட்டும் சிவனை
No comments:
Post a Comment