Friday, 31 October 2014

காரமடை நஞ்சுண்டேச்வரர்


                  காரமடை நஞ்சுண்டேச்வரர் 


                            பல்லவி

                  நஞ்சுண்டேச்வரனை நமச்சிவாயனை

                 அஞ்செழுத்தானை  மனமாரத்துதித்தேன்

                             அனுபல்லவி

                  தஞ்சமடைந்தவர்க்கு தயவளிக்குமீசனை

                  கஞ்சனைக் காய்ந்த  கேசவன் நேசனை

                                  சரணம்

                  அஞ்சனம் தீட்டிய உலக நாயகியின்

                  நெஞ்சம்  கவர்ந்த நீலகண்டனை

                  புன்சிரிப்பால் புரமெரித்த நெற்றிக்கண்ணனை

                   அஞ்சலென்றபய  கரம் நீட்டும் சிவனை          



                 

                 



பேரூர் பட்டீச்வரன்


                   பேரூர் பட்டீச்வரன் 

           
                           பல்லவி

                  பட்டீச்வரனை   மகாதேவனை

                  கேசவன் நேசனை  மனமாரத் துதித்தேன்

                             அனுபல்லவி

                  கட்டழகி பச்சை நாயகி உடனுறை

                  சட்டநாதனைக்  சாம்ப சிவனை
         
                                 சரணம்

                   அறம் பொருளின்பம் அனைத்தையுமளித்திடும்

                   மறை புகழ் ஈசனை மாதொரு பாகனை
   
                  இறவாப் புளியும் பிறவாப் பனையும்

                  சிறப்பாய் விளங்கும் பேரூர் தலத்தில்
                 
                   

முன்னறி தெய்வம்



              முன்னறி தெய்வம் 


                      பல்லவி

                என்னவென்றழைத்தால் எனைக்காக்க வருவாயோ

                இன்னலிடர் நீக்கும்   முன்னறி தெய்வமே

                        அனுபல்லவி

                பன்னகசயனன்  கேசவன் மருகனே

                பன்னகாபரணன் மகனே  கரிமுகனே

                          சரணம்

                 அன்னை பார்வதி கொஞ்சிடும் நாமமோ 

                சின்னவன் குகபெருமான் அழைத்த நாமமோ

                முன்னம் முனிவர்கள் உரைத்திடும் நாமமோ

                இன்னும் பல திருப் பெயரில் உன்னைத் துதித்து

           

               

        

Thursday, 30 October 2014

செங்கமலவல்லி


                    செங்கமலவல்லி 


                                பல்லவி

                 கமலமலரமர் செங்கமலவல்லியை

                 கமலபதம் பணிந்து மனமாரத் துதித்தேன்

                               அனுபல்லவி
           
                  கமலநாபன் கேசவன் மனங்கவர்

                  கமலலோசனியை கமலபதத்தாளை

                                    சரணம்

                   அருள் நிறைந்த அலைமகளை கருணை வடிவானவளை        

                    எளியோர் நலம் பேணும் மகாலக்ஷ்மியை

                     திருப்பாற்கடல் தந்த கடல் மகளைத் திருமகளை
  
                      கடைக்கண் வைத்தெனைக் காத்தருள வேண்டுமென




மணித்வீபகணபதி





              மணித்வீபகணபதி 

         
                              பல்லவி

                    அருள் தரும் ஐங்கரனை ஆனைமுகத்தோனை

                    கருணைக் கடலை மனமாரத் துதித்தேன்

                               அனுபல்லவி

                     கருநிறவண்ணன் கேசவன் மருகனை

                     குருகுகன் சோதரனை  குஞ்சர முகனை

                                  சரணம்

                     திருவருளும் குருவருளும் நமக்கருளும் கரிமுகனை

                     உருவில் பெரியவனைப் பெருவயிறு படைத்தவனை

                     அருமறைப் பொருளை அம்பிகை பாலனை

                      பெருமைக்குரிய மணித்வீப கணபதியை 

Wednesday, 29 October 2014

வாரணமுகன்


       வாரணமுகன்

          பல்லவி

       காரமர் மேனியனை மகா கணபதியை

        தாராசுரம் தலத்தில் மனமாரத் துதித்தேன்

             அனுபல்லவி

         வராணமுகனை கேசவன் மருகனை

         ஆரணப் பொருளை அருட்பெரும் மறையை

                      சரணம்

          சூரனை அழித்த வேலனின் சோதரனை

          ஏரார்ந்த கண்ணி பார்வதி மைந்தனை

           மாரனும் நாணும் பேரெழிலுடையவனை

           பாரெங்கும் புகழ் விளங்கும் ஆனை முகத்தோனை 

சதாசிவன் மைந்தன்


            சதாசிவன் மைந்தன் 


                   பல்லவி

          சதாசிவன் மைந்தனை கணபதியை

          சதா நினைந்து மனமாரப் பணிந்தேன்

                    அனுபல்லவி

           உதார சீலனைக் கேசவன் மருகனை

           பதாரவிந்தம் பணிவோர்க்கருள்பவனை

                          சரணம்

           சிதாகாசம்தனில் வீற்றிருப்பவனை

            நிதானமான முழுமுதற் கடவுளை

            உதாசீனமெனை செய்யாமல் காத்தருள

            யதார்த்தமான பக்தியுடன் துதித்து

            

நாராயணன் நாமம்



           நாராயணன் நாமம் 


           பல்லவி

           நாமமே போதும் நாராயணா - உனது

            அனுபல்லவி

           சாமமுதல் வேதங்கள் சாத்திரங்கள் போற்றும்

           ஆமருவியப்பன் கேசவன் முகுந்தனெனும்

                சரணம்

            காமக்ரோதாதி அறுபகை அகலவும்
   
            தாமச ராஜச குணங்கள் விலகவும்

             ஓமெனும் மந்திரப் பொருளை உணரவும்

             பூமியில் அனைவரும் நலமுடன் வாழவும் 

அணியரங்கன்


                அணியரங்கன் 


                        பல்லவி
               
               பிணி தீர்க்கும் கேசவனை ஆராவமுதனை

               அணியரங்கத்தம்மானை மனமாரத் துதித்தேன்
                                                   
                                சமஷ்டி  சரணம்
           
               தணியாத அருளளிக்கும் திருவேங்கடத்தானை

               அணி நீர்மலையானை சோலைவளரழகனை

                குணம் தரும் திருமாலை கோட்டியூர்பிரானை

               அணிமணிகள் புனைந்தவனை ஒன்றாகக் கண் டேன் 

                              ****************


பயின்ற தரங்கம் திருக்கோட்டி, பன்னாள்

பயின்றதுவும் வேங்கடமே பன்னாள், - பயின்ற

தணிதிகழும் சோலை யணிநீர் மலையே

மணிதிகழும் வண்தடக்கை மால்.

(Bhoothathalwar)

The generous adorable Lord of dark-gem-hue is an old resident of Arangam.
Tirukottiyur and Tiruvenkatam are also His inheritances.
The beautiful Malirumsolai and even the beautiful Tiruneermalai are ancient abodes of the Lord.

     

Tuesday, 28 October 2014

செந்தில் நாதன்


        செந்தில் நாதன் 


        பல்லவி

       செந்தில் நாதனை சேவற்கொடியோனை

        செந்தூர்த் தலத்தில் மனமாரத் துதித்தேன்

         அனுபல்லவி

        சந்திர வதனமும் சூரிய ஒளியும்

        சுந்தர வடிவும் கொண்ட சிங்கார வேலனை

           சரணம்

         இந்திரன் மகளை மணம் புரிந்தவனை

         கந்தனைக் கடம்பனைக் கேசவன் மருகனை 

         முந்தைய பழவினைப் பயன்கள் தொலைந்திட 

          சிந்தையில் வைத்து சேவடி போற்றி 


          

வல்லப கணபதி


             வல்லப கணபதி 


              பல்லவி

         எல்லாம் வல்ல மகா கணபதியை

         வல்லப நாயகனை மனமாரத் துதித்தேன்

                 அனுபல்லவி

          அல்லலிடர் களையுமானை முகத்தோனை

          சொல்லற்கரியானை  கேசவன் மருகனை

                     சரணம்

           வல்வினை போக்கும் ஒற்றைக் கொம்பனை

           வல்லரக்கன் கயமுகனை வதம் செய்த கரிமுகனை

           நல்லவர் வாழவும் தீயவர் மாயவும்

            நல்வழி காட்டும் வேழ முகத்தோனை

           

           
         
           
           

காரமடை ஸ்ரீ ரங்கநாதன்







          காரமடை ஸ்ரீ ரங்கநாதன் 


                 பல்லவி

     பாரெங்கும் புகழ் விளங்கும் ஸ்ரீ ரங்கநாதனை

      காரமடைத் திருத்தலத்தில் மனமாரத் துதித்தேன்

              அனுபல்லவி

      ஸ்ரீ ரங்கநாயகி உடனிருந்து போற்றும்

       கார்வண்ணமேனியனைக்  கேசவனை மாதவனை

                  சரணம்
   
       மாரனையீன்றவனை மருவினிய மைந்தனை

       சாரதியாய் தேர் நடத்தி பாரதப் போர் முடித்தவனை

       நாரதர் நான்முகன் நான்மறை புகழந்தேத்தும்

       நாரணனைத் திருமாலை தீனசரண்யனை

       
   








     
A wooden white horse donated by a British engineer to the Lord Ranganatha temple in Karamadai, near Coimbatore. The Utsava deity takes the street processions on this white horse. 

Monday, 27 October 2014

விக்னேச்வரன்


          விக்னேச்வரன் 


              பல்லவி

       பூமாலை சூடிய விக்ன விநாயகனை

       பாமாலை பாடி மனமாரத் துதித்தேன்

               அனுபல்லவி

        காமேஸ்வரன் மகனை கேசவன் மருகனை

        சாம முதல் வேதங்கள் போற்றும் கணபதியை

                    சரணம்

         தாமம் அரவு பாசாங்குசம் தரித்த

         ஓமெனும் மந்திரப் பொருள் வடிவானவனை

         தூமகேதுவை  துதிப்பவர்க்கருள்பவனை

          காமனும் நாணும் பேரழகுடையவனை

 

         

         

Sunday, 26 October 2014

விளக்கு கணபதி



        விளக்கு கணபதி 


        பல்லவி

       குத்து விளக்கின் மத்தியில் வீற்றிருக்கும்

        மகாகணபதியை  மனமாரத் துதித்தேன்

          அனுபல்லவி

         நித்தியம் தொடங்கும் கருமங்களனைத்தும்

         விக்கினமின்றி நடைபெற உதவிடும்

            சரணம்

         எத்தனை இடர் வரினும் அத்தனையும் களைந்து

         பக்தருகருள் தரும் ஆனைமுகத்தோனை

         வித்தகர் போற்றும் புத்தியிலுரைபவனை

         மத்தள வயிற்றானைக் கேசவன் மருகனை 

Saturday, 25 October 2014

மருதமலை முருகன்



           மருதமலை  முருகன் 


                   பல்லவி

            அருள்மிகு முருகனைக்  கேசவன் மருகனை

            மருத மலைத் திருத்தலத்தில் மனமாரத் துதித்தேன்

                   அனுபல்லவி

             குருவாய் தந்தைக்கு அருமறை ப்பொருள் சொன்ன

             பெருமைக்குரிய  சுவாமி நாதனை

                       சரணம்

              உருவில் சிறியவனைக் கீர்த்தியில் பெரியவனை

              கருணையே வடிவான கார்த்திகேயனை

               ஒரு குறையுமணுகாமல் ஏழையேனெனைக் காத்து

              இருவினைப் பயன் நீக்கி ஆண்டருள வேண்டுமென




              

கலியுகத் தெய்வம்


  கலியுகத் தெய்வம் 


பல்லவி

கலியுகம்தனிலே கண்கண்ட தெய்வமாம்

மகா கணபதியை மனமாரத் துதித்தேன்

அனுபல்லவி

நலிந்தவர்க்கருளும்  கருணா மூர்த்தியை

எளிய கடவுளை கேசவன் மருகனை

 சரணம்

 நிலவின் பிறையணிந்த ஆனைமுகத்தோனை

 எலிவாகனனை ஏக தந்தனை

 புலித்தோலை அரைக்கிசைத்த ஈசன் மகனை

 வலியரக்கன் கயமுகனை வதம் செய்த கரிமுகனை

Friday, 24 October 2014

பூசை

பூசை 

பூசை என்றால் தமிழில்  "அடி " என்றும் பொருள் உண்டு ! அதைப்  பூஜைப்  படத்தில் முழுமையாகப் பயன் படுத்தியுள்ளனர் !  சில காட்சிகளில் ஹீரோ காமேடியனையும் மற்றும் பல காட்சிகளில் மற்ற பாத்திரங்களையும் வில்லனையும் சகட்டு மேனிக்கு அடிக்கிறார். எல்லா காட்சிகளிலும் சத்தம் காதைத் துளைக்கிறது . சத்தத்தின் அளவு (டெசிபல்) இவ்வளவுதான் இருக்கலாமென்று ஒரு அளவுகோல் எதுவும் சினிமாப் படங்களுக்கு கிடையாதோ!படம் முழுவதும் காதுக்குள் ஓசை புகுந்து மிகவும் கொடுமைப் படுத்தியது . மற்றபடி ஸ்ருதிஹாசன் அதிக பட்ச அங்க லாவண்யகளைக் காட்டி  அழகு சேர்த்திருக்கிறார்! விஷாலும் நடிக்க முயற்சித்திருக்கிறார் !  பூசை  நிறைய ஓசை !

Thursday, 23 October 2014

மயில் வாகனன்


                     மயில் வாகனன் 


                                 பல்லவி

                   மயிலொன்று அசைந்தாடக் கண்டேன் -  அழகு
                     
                                   அனுபல்லவி

                    கையில் வேலோடு  கருணை விழியோடு

                    தையலர்  வள்ளி தேவானை மனம் மயங்க

                                      சரணம்

                     அய்யனை முருகனை கேசவன் மருகனை

                     மெய்ப்பொருளை மேதினியோர் போற்றும் கந்தனை

                     துய்யனை துதிக்கையன் சோதரனை சரவணனை

                     ஐயையின் மகனை அறுமுகனை அதில் கண்டு


   

பத்ம கணபதி




             பத்ம கணபதி 


                  பல்லவி

           பத்மாசனத்தில் வீற்றிருக்கும் கணபதியை

           பத்ம மலர் தூவி மனமாரத் துதித்தேன்

                     அனுபல்லவி

           பத்மநாபன் கேசவன் மருகனை

           உத்தமிப் புதல்வனை  தத்துவப் பொருளை

                         சரணம்

           நித்தமும் துதித்திடும் பக்தருக்கருள் தரும்

           வித்தகனை வேழ முகத்தோனை ஐங்கரனை

           மத்தமும் மதியமும் வைத்திருக்கும் கரிமுகனை

            எத்திசையும் புகழ் விளங்கும் விக்ன விநாயகனை
         
         

           

       

              

Wednesday, 22 October 2014

பார்வதி மைந்தன்



             பார்வதி மைந்தன் 


                  பல்லவி

            பங்கய பதத்தானை பார்வதி மைந்தனை

             துங்கக் கரிமுகனை மனமாரத் துதித்தேன்

                    அனுபல்லவி

            பங்கய நாபன் கேசவன் மருகனை

            சங்கடமிடர் நீக்கும் ஆனைமுகத்தோனை

                         சரணம்

            இங்குமங்குமலைபாயும் புலன் வழி செல்லும்

            விலங்கு மனத்தினை  அடக்கிடவேன்டியே

            திங்கள் பிறையணிந்த  வேழமுகத்தோனை

             மங்கள மூர்த்தியை மகாகணபதியை 

Tuesday, 21 October 2014

மலர்க் கிரீட கணபதி



 மலர்க் கிரீட கணபதி 


        பல்லவி

மலர்க் கிரீடமணிந்த  மகா கணபதியை

 ஆனைமுகத்தோனை மனமாரத் துதித்தேன்

        அனுபல்லவி

பலர் போற்றும் கரிமுகனைக் கேசவன் மருகனை

 நலம் தரும் விக்ன விநாயகனை  சுமுகனை

          சரணம்

  பலம் நிறைந்தவனை பாலகணேசனை

  சுலபமாய் பக்தருக்கு   அருள் தருபவனை

  வலம்புரி கணபதியை  வக்கிர துண்டனை

  மலர்ப் பதம் பணிந்து ஆண்டருள வேண்டி



Sunday, 19 October 2014

மாயபிரான்



         மாயபிரான் 


             பல்லவி

          மாயபிரானை  மதுசூதனனை

          புலியூர்த் திருத்தலத்தில் மனமாரத்  துதித்தேன்

                 அனுபல்லவி

         தாயவள்  பொற்கொடியாள் உடனிருந்து போற்றும்
 
         தூயவனைத் துயர்களையும் தீனசரண்யனை

                   சரணம்  

         தீயவர் மாயவவும் நல்லவர் வாழவும்

         ஓயாதருள் தரும் மாலனை மாதவனை
                   
        ஆயர்குலத்தோனை  பஞ்சவர்கள் பணியும்

         நேயனைக்  கேசவனை கருநீலவண்ணனை 
           
          

Saturday, 18 October 2014

அற்புத நாராயணன்



          அற்புத நாராயணன்

                 பல்லவி

      அற்புத நாராயணனை ஆதி கேசவனை

      திருக்கடித்தானம் தனில் மனமாரத்துதித்தேன்

                     அனு பல்லவி

        கற்பகவல்லி உடன் வீற்றிருக்கும்

        பொற்பதத்தானை புண்ணிய மூர்த்தியை

                       சரணம்

          சிற்பர யோகியர் ஞானியர் மற்றும்

          பற்பலரும் சகாதேவனும் பணிந்தேத்தும்

           சற்குண நிர்குண ஆனந்த வடிவினனை

           நற்கதி அளித்தெனை ஆண்டருள வேண்டுமென 

Friday, 17 October 2014

திரு காட்கரையப்பன்

     

      திரு காட்கரையப்பன்             

                 பல்லவி

         வாமன மூர்த்தியை  காட்கரை யப்பனை

         ஸ்ரீ மகா விஷ்ணுவை மனமாரத் துதித்தேன்

                  அனுபல்லவி

          பூமகள் பெருஞ்செல்வ நாயகி  உடனிருக்கும்

          மாமாயன் கேசவனை மது சூதனனை

                   சரணம்

         ஆமருவி யப்பனாய் அழுந்தூரில் காட்சி தரும்

         தாமரை நாபனை  தாமோதரனை

         காமனையீன்றவனை கருமுகில் வண்ணனை

         தேமதுரத் தமிழால் பாமாலை பாடி 

அழகு கணபதி





           அழகு கணபதி 


                     பல்லவி

          அழகு கணபதியைக் குழந்தைக் கடவுளை

          பழகு தமிழ்  மொழியில்  பாட்டிசைத்துப் பணிந்தேன்

                  அனுபல்லவி

           கழலடி பணிந்தோர்க்கருள் தரும் கரிமுகனை

            குழலூதி மனங்கவரும் கேசவன் மருகனை

                         சரணம்

           அழலேந்தும் நெற்றிக் கண்ணனன் சிவன் மகனை

           வழக்கில் சாட்சி சொன்ன வாதாபி கணபதியை

           மழையெனக் கருணை பொழிந்திடும் விநாயகனை

           நிழலவனரவிந்த பதமென தினம் துதித்து

           

           

Thursday, 16 October 2014

கற்பக விநாயகன்

              கற்பக விநாயகன் 


                பல்லவி

           வருமிடர்  தவிர்த்திடும் மகாகணபதியை

           கருமங்கள் தொடங்கும் முன் அனைவரும் பணிவோம்

                  அனுபல்லவி

            திருமுருகன் தமையனைக் கேசவன் மருகனை

            உருவில் பெரியவனை ஆனை முகத்தோனை

                        சரணம்

            ஒரு குறையுமணுகாமல் பக்தரைக் காப்பவன்

            பொருள் புகழ் கல்வியனைத்தையுமளிப்பவன்
                   
            பெரும் பிணி பவக்கடல் கடந்திட உதவிடும்
      
            கருணைக் கடலவன் கற்பக விநாயகன்
              

வேழ முகன்


                வேழ முகன் 


                           பல்லவி

              மலர்களாலலங்கரித்த   மகாகணபதியை

              வலம் வந்து பணிந்து மனமாரத் துதித்தேன்

                             அனுபல்லவி

                அலங்காரப் பிரியன் கேசவன் மருகனை

                அபிஷேகப் பிரியன் பரமசிவன் மகனை

                                  சரணம்
   
                 உலகமனைத்தையும் படைத்தும் காத்தும்

                நிலைபெறச் செய்திடும் வேழ முகத்தோனை
 
                அலகிலா விளையாடல் பல புரிந்தவனை

                கலைகளை இசையை ரசித்திடும் கரிமுகனை
                 
                 


மாதவப் பெருமாள்


                       மாதவப் பெருமாள் 


                                 பல்லவி

                     மாதவப் பெருமாளைக்  கேசவனைத் திருமாலை

                     திருமயிலைத் திருத்தலத்தில் மனமாரத் துதித்தேன்

                                 அனுபல்லவி

                     ஏதமிலாத அமிர்தவல்லி உடனுறை

                     யாதவ குலத்தோனை  ஸ்ரீதரனை முகுந்தனை

                                     சரணம்

                     வேதியரோதும் வேதப்பொருளை

                     கீதையின் நாயகனை தேவகி மைந்தனை

                     பூதலம் போற்றும்  புண்ணிய மூர்த்தியை

                       ஓதக் கடலில் பள்ளி கொண்டிருப்பவனை 

பெரிய பெருமாள்

                   பெரிய பெருமாள் 


                         பல்லவி

               அரி நாராயணனைப்  பெரிய பெருமாளை

               பெரிய கோவிலில்  மனமாரத்  துதித்தேன்

                           அனுபல்லவி

                 பெரிய பிராட்டி அரங்கநாயகி

                 அருகிருந்து போற்றும் கேசவனை மாதவனை

                                சரணம்

                 பெரிய திருவடியும் ஆழ்வார்களும் வணங்கும்

                 பெருமைக்குரிய  திருவரங்கநாதனை

                  சரிநிகர் சமானம் தனக்கொருவரில்லாத

                  பெரியவனைக் கரியவனை பள்ளிகொண்ட ரங்கனை

                

Wednesday, 15 October 2014

பாலன் முகுந்தன்


                              பாலன் முகுந்தன் 


                                      பல்லவி

                     நீலவண்ணனை கண்ணனைக்  கேசவனை

                     பாலனை முகுந்தனை மனமாரத்துதித்தேன்

                                     அனுபல்லவி

                    கோலக் குழலூதி ஆநிரை மேய்த்தவனை

                    பாலக்ருஷ்ணனை கோபியர் லோலனை

                                       சரணம்

                    காளிங்கன் தலை மீது நடம்புரிந்த பாலனை

                   மேலுலகோரும் இந்திரனும் பணிந்தேத்தும்

                   ஞாலமுண்டவாயனை ஆலிலை துயின்றவனை

                   தாளினைப் பணிவோர்க்குப்  பிள்ளைவரம் தருபவனை



     மழலை வரமும் சகல பாக்கியங்களும் பெற...

இந்தீவரஸ்யாமள கோமளாங்கம்
இந்த்ராதி தேவார்ச்சித பாதபத்மம்
ஸந்தான கல்பத்ரும மாஸ்ரிதானாம்
பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி
-பால முகுந்தாஷ்டகம்.

பொதுப் பொருள்: நீலோத்பல மலரின் நிறம் கொண்டவரே! கிருஷ்ணா, நமஸ்காரம். பேரழகு கொண்ட சரீரம் பெற்றவரே, இந்திரன் முதலான தேவர்களால் பூஜிக்கப்பட்ட அழகு பாதங்களை உடையவரே, நமஸ்காரம். விரும்பி வேண்டுவோருக்கு புத்திர பாக்யம் அருள்பவரே, கற்பக விருட்சம் போல் பக்தர்களுக்கு அனைத்து பாக்கியங்களையும் அளிப்பவரே, கிருஷ்ணா, நமஸ்காரம்.


அரங்கன் திருவடியே சரணம்


                   அரங்கன் திருவடியே சரணம் 


                               பல்லவி

             அரங்கனே ஆனந்தத் தேனே கேசவனே

             பரமனே உனதிரு திவடியே என்துணை

                               அனுபல்லவி

              சுரக்கும் கருணை  ஊற்றாயிருப்பவனே

              அரனயன் பணிந்திடும் நாராயணனே

                                சரணம்

              உறவும் சுற்றமும் எனக்கென யாருமில்லை

              பிறப்பிறப்பெனும் சுழலில் சிக்குண்டு தவிக்கின்றேன்

              கறவைகள் மேய்த்திடும் ஆயர்குல விளக்கே

              சரணடைந்திடுமெனையே  காத்தருள்வாயே 

Tuesday, 14 October 2014

பொய்க்கூ


                  பொய்க்கூ

               பிச்சைக்காரியின் ஆடையில்

                ஆங்காங்கே  கிழிசல்கள்

                 மாடலணிந்தால் அதே ஆடையில்

                  ஆங்கங்கே அழகிய டிசைன்கள் !!!

               

 

  

பவனி வரும் கணபதி



                               

                     பவனி வரும் கணபதி 



                                       பல்லவி

                    பவனி வரும் மகாகணபதியைப் பணிந்தேன் 

                    அவனியோர்  கொண்டாடும் ஆனைமுகத்தோனை

                                        அனுபல்லவி

                     சிவலிங்கத்துடனே வீற்றிருக்கும்  ஐங்கரனை 

                     சிவகணங்கள் தலைவனைக் கேசவன் மருகனை

                                           சரணம்

                     கவனமுடனலங்காரித்த  மலர்ப் பல்லக்கில்

                     உவகையுடனமர்ந்து காட்சி தரும்  கரிமுகனை

                     நவமணி மாலைகள் மலர் மாலை சூடிய

                     சிவன் மகனைப்  புவி போற்றும் விக்ன விநாயகனை









Monday, 13 October 2014

அப்போதைக்கிப்போதே சொல் !

            அப்போதைக்கிப்போதே சொல் !


                               பல்லவி

                   இப்போதே அவன் நாமம்  நாவார உரைத்திடுவோம்

                   எப்போது நம் காலம் முடியுமென நாமறியோம்

                             அனுபல்லவி

                    தப்பித் தடுமாறித் தள்ளாத வயதில்

                    செப்பிடமுடியாமல் தடுமாறும் நிலை வருமுன்

                                  சரணம்

                    ஒப்புவமையில்லாத மலையப்பன் கோவிந்தன்

                    முப்போதும் நமக்கருள  காத்திருக்கும் வேங்கடவன்

                    தப்பேதுமில்லாத முத்தப்பன் முனியப்பன்

                    இப்பிறப்பில் நமைக்காக்கும் கலியுக வரதன்







வைத்த நாள்வரை எல்லை குறுகிச்சென்று,

எய்த்தி ளைப்பதன் முன்னம் அடைமினோ,

பைத்த பாம்பணை யான்திரு வேங்கடம்,

மொய்த்த சோலைமொய் பூந்தடம் தாழ்வரே.

(Swamy Nammazhwar)

Before your numbered days are spent, before old age saps your strength, reach for the lotus feet of Venkatam, the Lord of hooded serpent bed.


கணபதி தேவன்



       கணபதி தேவன்     

               பல்லவி

           கனிந்தருள் புரிவாய் கணபதி தேவா

            உனையன்றித் துணையில்லை உலகினிலெனக்கு

                  அனுபல்லவி

            புனிதனே பூமியில் அனைவரும் வணங்கிடும்

            இனிய கடவுளே கேசவன் மருகனே

                    சரணம்

            முனிவரும் தேவரும் பணிந்திடும் பொற் பாதனே

            தனிப் பெருங்கருணை அளித்திடுமெளியோனே
       
            பனிமலை நாதனின்  மைந்தனே கரிமுகனே

            கனிகளும் மோதகமும் படைத்துனைத் துதித்தேன்

             

           





             

Sunday, 12 October 2014

திருவடிப் பாதுகை

 

         திருவடிப் பாதுகை 


                பல்லவி

      திருவடியே சரணமெனத் கேசவனைப் பணிந்து

        திருவடிப்பாதுகையை  மனமாரத்துதித்தேன் 

                 அனுபல்லவி
     
        திருவடியைச் சேர்ந்திடவே திருவடிச் சரண் புகுந்தேன்

        திருவடியை அடைவிக்கும் திருவடியைத் தொழுதேன்    
 
                      சரணம்

          திருவடியின் புகழுரைத்துத்   திருவடியே போற்றி

         திருவடித் தாமரையே மறைப் பொருளென்றுணர்ந்து

         திருவடியே துணையென்று  திருப்பாதம் பணிந்து

         திருவடியே கதியென்று  திருவடியைப் பற்றி



திருவடியை நாரணனைக்கேசவனைப் பரஞ்சுடரை,
திருவடிசேர் வதுகருதிச் செழுங்குருகூர்ச் சடகோபன்,
திருவடிமே லுரைத்ததமிழ் ஆயிரத்து ளிப்பத்தும்,
திருவடியே அடைவிக்கும் திருவடிசேர்ந் தொன்றுமினே.

           

பரம பதம்


   பரம பதம் 


         பல்லவி

     மனத்திலுன் மணதூணைப் பற்றி மகிழ்ந்தேன்

      பரமபதம் சேர அரங்கனே எனக்கருள்வாய்

         அனுபல்லவி

      கனவிலும் நினைவிலும் உனது திருநாமமே

       மனமாரத்துதித்துன்  திருவடியே நினைந்து

             சரணம்

        அனந்தசயனனே  அரங்கத்தம்மானே

        அனங்கனைப் படைத்தவனே ஆதிகேசவா

        வினதையின் புதல்வனை வாகனமாய்க் கொண்டவனே

        தனம் புகழ் பதவி எதுவும் வேண்டேன்

       
       

கூத்தனூர் சரஸ்வதி

                          கூத்தனூர் சரஸ்வதி 

  
                                      பல்லவி 

                            ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் 

                           நேயமுடன் எனக்களிக்கும் கலைமகளைத் துதித்தேன் 

                                       அனுபல்லவி 

                            தூய வெண் கலையுடுத்தி வெண்கமல மலரமரும் 

                            தேயாத புகழ் மேவும் சரஸ்வதியை பாரதியை 

                                           சரணம் 

                             நாயகியாய் கேசவன் மணிமார்பில் வீற்றிருக்கும் 

                             தாய் மகாலக்ஷ்மியும் மலைமகளும் நேசிக்கும் 

                             தூயவளை  அயன்மனையை  தேவர் முனிவர் பணி 

                             மாயையை  கூத்தனூர் தலம்  வளர் தேவியை 

Saturday, 11 October 2014

செங்கமலவல்லி




                       செங்கமலவல்லி 


                                           பல்லவி

                              மாதவன் மார்பிலுறை  மஹா லக்ஷ்மியை

                              தீதறு திருமகளை  மனமாரத் துதித்தேன்

                                           அனுபல்லவி

                              வேதபுராணங்கள் சாத்திரங்கள் போற்றும்

                              மாதவளைக் கோதையை மயூர வல்லியை

                                             சரணம்

                              யாதவ குலதீபன் கேசவன் மனங்கவர்

                              ராதையை அலைமகளை செங்கமலவல்லியை

                              ஏதமிலாதவளை  கடலரசன் குலமகளை

                              ஆதரவளித்தென்னை ஆண்டருள வேண்டுமென
                               

சரணம் கோவிந்தா

                   சரணம் கோவிந்தா 


                           பல்லவி

                சரண கமலமே சரணடைந்தேன் கோவிந்தா

                மரணம் பிறப்பென்னும் பவச்சுழுல் நீங்கிடவே

                           அனுபல்லவி

                சரணடைந்தோர்க்கருளும் கருணாநிதியே

                வரங்களை அளித்திடும் மாதவா கேசவா

                             சரணம்

                 அரனயன் நாரதரும் சுகசனகாதியரும்

                  நரர்சுரருமிந்திரனும்  கரம்பணிந்தேத்தும்

                  பரமக்ருபாநிதே பாற்கடல் வாசனே

                 அரவிந்த நாபனே  அரி நாராயணனே 

வேளுக்கை அழகியசிங்கன்






                   வேளுக்கை அழகியசிங்கன் 


                                    பல்லவி

                    ஆசையுடன் வீற்றிருக்கும் அழகிய சிங்கனை

                     நேசமுடன் வணங்கி மனமாரத் துதித்தேன்

                                    அனுபல்லவி

                     பாசமிகு அம்ருதவல்லி மனங்கவர் கேசவனை

                     தேசுடைய மூர்த்தியை முகுந்தநாயகனை

                                      சரணம்

                      ஈசனும் பிரமனும் தேவரும் முனிவரும்

                      காசினியோரனைவரும் கரம்பணிந்தேத்தும்

                      மாசிலாமணியை  வேளுக்கை நாதனை
                       
                      யாசித்தெனையே ஆண்டருள வேண்டுமென
                      

கருடவாகனன்








                     கருடவாகனன் 


                            பல்லவி

                 கருடாரோகணனைத் திருமாலைக் கேசவனை

                 கருணையுடன் எனக்கருள வேண்டுமெனத் துதித்தேன்

                                அனுபல்லவி

                 பெருமைக்குரிய திருவல்லிக்கேணியில்

                 கருணையுடன் எழுந்தருளி காட்சி தரும் சாரதியை

                                   சரணம்

                  வருடத்தில் சிறந்த புரட்டாசி சனிவாரம்

                  அருளோடும் அழகோடும்  வீதி உலாவரும்

                   திருப்பாற்கடலோனை  தீனசரண்யனை

                   திருமகள் மார்பனை கமலக் கண்ணனை



                                   

                 

            

கவி (த் )தை






                      கவி (த் )தை 


                       மூத்திரச்சந்தின்  நாத்தமும்

                        சேத்தில் கிடக்கும் மலத்தின் அழகும்

                         வாத்தின் நடையும்

                          புணர்ச்சியின் அழகும்
 
                           புழுதியின் மணமும்

                           உடம்பின் அழுக்கும் சொரியும் சிரங்கும்

                            அதில் வடியும் சீழும் ரத்தமும்

                             வார்த்தை ஜாலமும்

                             கவிதையென்றால்

                              எனக்குக் கவிதை தேவையில்லை !!!

ஒப்பிலா அப்பன்








     

               ஒப்பிலா அப்பன் 


                           பல்லவி

               ஒப்பிலா மணியை  ஒப்பிலி யப்பனை

               தப்பிலாதவனை மனமாரத் துதித்தேன்

                                  அனுபல்லவி

                சுப்பிரமணியன் மாமனைக் கேசவனை

                நப்பின்னை மனங்கவர் நாதனை மாதவனை

                                  சரணம்

                 கப்பிய கருநீலவண்ணனை முகுந்தனை

                  முப்பொழுதுமென் சிந்தையிலிருத்தி

                 துப்புரவுடனே  அங்கம் துலக்கி

                  எப்பொழுதுமவன் திருநாமமே உரைத்து

             



Friday, 10 October 2014

வடுவூர் கோதண்டராமன்



  

                            வடுவூர் கோதண்டராமன் 


                                        பல்லவி

                             கோதண்ட ராமனை மனமாரத் துதித்தேன்

                              வடுவூர் திருத்தலத்தில் கோயில் கொண்டிருக்கும்

                                             அனுபல்லவி

                              ஆதவ குலத்துதித்த மாதவனைக் கேசவனை

                              சீதையின் மனம்கவர்ந்த  ஜானகி ராமனை

                                              சரணம்

                              ஓதக்கடல் கடந்து தென்னிலங்கை சென்று

                              பாதகம் செய்த ராவணனை வென்றவனை
                           
                               ஏதமிலாதவனை ஸ்ரீ ஜெயராமனை

                              பூதலம் போற்றும்  பட்டாபி ராமனை                        

கலைகளை ரசித்திடும் கணபதி






              கலைகளை ரசித்திடும் கணபதி 


                                     பல்லவி

                   இயலிசை நாட்டிய கலைகளின் ரசிகனை

                    மகா கணபதியை  மனமாரத் துதித்தேன்

                                      அனுபல்லவி

                    துயரிடர்  களைந்திடும்  துங்கக் கரிமுகனை

                    மயர்வுறும் மத்தமும்  மதியும் வைத்திருப்பவனை

                                       சரணம்

                    கயமுக அரக்கனை வதம் செய்தவனை

                    அயனரனரி பணி ஆனைமுகத்தோனை

                    புயங்கனின்  மகனை கேசவன் மருகனை

                    தயவுடன் பக்தரைக் காத்தருள்பவனை

மரகதவல்லி



                  மரகதவல்லி 


                           பல்லவி

                 மரகத வல்லியை  மனமாரத் துதித்தேன்

                  சரணடைந்தோரைக் கனிவுடன் காத்தருளும்

                         அனுபல்லவி

                 பரந்தாமன் கேசவன் விஜய ராகவனின்

                 பரந்த மணிமார்பில் வீற்றிருப்பவளை

                             சரணம்

                  பிரமனும் நாரதரும் சுகசனகாதியரும்

                  நரர்சுரருமிந்திரனும் கரம்பணிந்தேத்தும்

                  பரம தயாகரியை  பாற்கடலருளிய

                  திருமகளை அலைமகளை மகாலக்ஷ்மியை

ஓங்கார நாயகன்

      

                 ஓங்கார நாயகன் 


                           பல்லவி 

                 ஓங்கார நாயகனை மகாகணபதியை 

                 பாங்குடனே பணிந்து மனமாரத் துதித்தேன் 

                              அனுபல்லவி 

               தீங்கின்றி நலமனைத்தும் பணிவோர்க்கருள்பவனை 

                ஓங்கி உலகளந்த கேசவன் மருகனை 

                                சரணம் 

                காங்கேயன் சோதரனை ஐந்து கரத்தானை 

                வீங்கிய வயிறுடைய ஆனைமுகத்தோனை 

                ஈங்குலகோர் போற்றும் விக்ன விநாயகனை 

                தேங்காய் பழம் பாக்கு வெற்றிலை படைத்து                
                 

மகாவிஷ்ணு

             

       

                               மகாவிஷ்ணு 


                                  பல்லவி

                    திருமாலைக் கேசவனை தீன சரண்யனை

                     கருணா மூர்த்தியை மனமாரத் துதித்தேன்

                                   அனுபல்லவி

                      தருமநெறி காக்க அவனியிலவ தரித்த
     
                       திருவேங்கடமுடையானை  ஆராவமுதனை

                                       சரணம் (1)

                      சாந்தமூர்த்தியை மகாவிஷ்ணுவை

                      அரவணை துயிலும் பதும நாபனை

                      மேகவண்ணனை  அழகிய மேனியனை

                     உலகினைத்தன் வசம் வைத்திருப்பவனை

                                      சரணம்(2)

                     திருமகள் மார்பனை கமலக்கண்ணனை

                     தவயோகியர்  தம் மனத்திலிருப்பவனை

                     பவபயம் தீர்ப்பவனை பரமதயாளனை

                     கலியுக வரதனை உலகநாதனை



Thursday, 9 October 2014

ஸ்ரீ மஹாலக்ஷ்மி



                  ஸ்ரீ மஹாலக்ஷ்மி 


                         பல்லவி

             கடலரசன் மகளை  மஹாலக்ஷ்மியை

             கொடியிடையாளை மனமாரத் துதித்தேன்

                         அனுபல்லவி

              திடமுடன் கதையும் சங்கும் சக்கரமும்

              இடவலக் கரங்களிலேந்திடும் மாயையை

                             சரணம் (1)

              பட அரவணை துயிலும் கேசவன் மணிமார்பில்

              இடம் கொண்ட திருமகளை  பீடமதிலமர்ந்தவளை

              அடங்காக் கோலாசுரனை அடக்கிய அலைமகளை

              அடலேறு கருடனின் மீதேறி வலம் வரும்  

                              சரணம் (2)
       
               இடர் வினை துயர் நீக்கும் கருணைக் கடலை

               கொடியவர் நடுங்கும்  சுடரைச் சோதியை

                முடிவும் முதலுமனைத்துமானவளை

                 அடியார்க்கருள் தரும் பங்கய பதத்தாளை



नमस्तेऽस्तु महामाये श्रीपीठे सुरपूजिते ।
शङ्खचक्रगदाहस्ते महालक्ष्मि नमोऽस्तुते ॥१॥
Namastestu Mahaa-Maaye Shrii-Piitthe Sura-Puujite |
Shangkha-Cakra-Gadaa-Haste Mahaalakssmi Namostute ||1||
Meaning:
1.1: (Salutations to Devi Mahalakshmi) Salutations to the Mahamaya (the Great Enchantress), Who is Worshipped by the Devas in Sri Pitha (Her Abode).
1.2: Who has the Conch, Disc and Mace in Her Hands; Salutations to that Mahalakshmi.
नमस्ते गरुडारूढे कोलासुरभयंकरि ।
सर्वपापहरे देवि महालक्ष्मि नमोऽस्तुते ॥२॥
Namaste Garudda-Aaruuddhe Kola-Aasura-Bhayamkari |
Sarva-Paapa-Hare Devi Mahaalakssmi Namostute ||2||
Meaning:
2.1: (Salutations to Devi Mahalakshmi) Salutations to the One Who Rides the Garuda, Who is the Terror to Kolasura,
2.2: The Devi who Removes All Sins; Salutations to that Mahalakshmi.
सर्वज्ञे सर्ववरदे सर्वदुष्टभयंकरि ।
सर्वदुःखहरे देवि महालक्ष्मि नमोऽस्तुते ॥३॥
Sarvajnye Sarva-Varade Sarva-Dusstta-Bhayamkari |
Sarva-Duhkha-Hare Devi Mahaalakssmi Namostute ||3||
Meaning:
3.1: (Salutations to Devi Mahalakshmi) Who is All-Knowing, Who is the Giver of All Boons, Who is the Terror to All the Wicked,
3.2: The Devi who Removes All Sorrows; Salutations to that Mahalakshmi.

அணியரங்கன்



                அணியரங்கன் 


                     பல்லவி

              அரங்கனை அழகனை ஆதிகேசவனை

              அரவிந்த  நாபனை மனமாரத்துதித்தேன்

                      அனுபல்லவி

              பரம பதம்  வைகுண்டமென்றுலகோரழைத்திடும்

              அரங்கமானகரில் அரவணையில் பள்ளிகொண்ட

                         சரணம்

               சரணடைந்தோர்க்கருளும் தீனசரண்யனை

               அரங்கநாயகி தங்கும் திருமார்பனை    

                பரந்தாமனைப் பாற்கடல் வாசனை

                அறவோர் துதித்திடும் ஸ்ரீமன்  நாராயணனை

             

               

கனகமய கணபதி






                   

               கனகமய கணபதி 


                          பல்லவி

           கனகமய மண்டபத்தில் கருணையுடன் வீற்றிருக்கும்

           குங்கும கணபதியை மனமாரத் துதித்தேன்

                          அனுபல்லவி

           அனல் புனல் காற்று நிலம் நீள் விசும்பென

          அனைத்துமானவனை ஆனைமுகத்தோனை

                         சரணம்

           தனம் கல்வி குலமளிக்கும் தீன சரண்யனை

            இனிய கரிமுகனை கேசவன் மருகனை

            வினையிடர் நீக்கும் விக்ன விநாயகனை

            தனக்குவமையில்லாத தனிப் பெருந்தேவனை


           

              

Wednesday, 8 October 2014

சௌம்யநாராயணன்


              சௌம்யநாராயணன் 



                     பல்லவி
           
               அருள் மிகு  சௌம்யநாராயணனை

                திருக்கோட்டியூர் தலத்தில் மனமாரத் துதித்தேன்

                        அனுபல்லவி

                திருமா மகளின் மனங்கவர்  நாயகனை

                நின்றும் கிடந்தும் அமர்ந்தும் காட்சி தரும்

                           சரணம்

                 அரக்கரையழித்திட  அனைவரும் கூடி

                 உரத்த சிந்தனை  செய்ததன் பயனாய்

                 தரும நெறி காக்க அவதரித்தவனை

                 திருமாலைக் கேசவனை தீன சரண்யனை
                   

மாதவன்

            மாதவன் 


                பல்லவி

          வேதங்கள் போற்றும் மாதவப்பெருமாளை

          திருமயிலைப் பதிதனில் மனமாரத் துதித்தேன்

                 அனுபல்லவி

           மாதா அமிர்தவல்லி மனம் மகிழ உடனிருக்கும்

           ஸ்ரீ தரனைக்  கேசவனை ஸ்ரீனிவாசனை

                     சரணம்

           வேதாந்த தேசிகரும் வித்தகரும் புகழ்ந்தேத்தும்

            யாதவ குலத்தோனை ஸ்ரீ வாசுதேவனை

            பாதாரவிந்தம் பணிவோர்க்கருள்பவனை

             சாதாரணரையும்  மேதாவியாகச்செய்யும் 

திருவரங்கம் (இன்று)


                        திருவரங்கம்  (இன்று)


                                    பல்லவி 

                       திருவரங்கனை மனமாரத்துதித்தேன் 

                       பெரும் பிணி பவக்கடல் கடந்திட உதவிடும் 

                                      அனுபல்லவி 
                       
                       கருத்தினைக் கவர்ந்திடும் அழகிய கேசவனை 
   
                        கரும்பென இனித்திடும் நாமமுடையவனை 
                        
                                        சரணம் 

                     சீருந்தும் பேருந்தும் சீறிப் பாய்ந்து செல்லும்

                     தார்சாலைகள்  சூழ்ந்த  மண்டபங்களுள்ளே

                     இருபுறம் விரித்திருக்கும் கடைகள் நிறைத்திருக்கும்

                     திருவரங்கம் தனில் பள்ளி கொண்டிருக்கும்





1. திருவரங்கம் என்னும் ஸ்ரீரங்கம் (அன்று)

இரும்பனன் றுண்ட நீரும்
போதருங் கொள்க, என்றன்
அரும்பிணி பாவ மெல்லாம்
அகன்றன என்னை விட்டு
சுரும்பமர் சோலை சூழ்ந்த
அரங்கமா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டென்
கண்ணினை களிக்கு மாறே
-திருக்குறுந்தாண்டகம் 13.

எந்நேரமும் வண்டுகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் அழகிய
சோலைகள் சூழ்ந்த அரங்கத்தில் பள்ளிகொண்ட கரும்பாகிய என்
அரங்கனைக் கண்ட மாத்திரத்தில், சூடான இரும்பில் பட்ட நீர் எவ்வாறு
வேகமாக உட்கவரப்பட்டு காணாமல் போகிறதோ அதுபோல், என்
பாவமெல்லாம் என்னைவிட்டு பறந்தோடிவிட்டது என்று
திருமங்கையாழ்வாரால் பாடிப் பரவசித்து மங்களாசாசனம் செய்யப்பட்ட
இத்தலம் இன்றைய இந்தியாவிலேயே மிகச் சிறப்பான தலமாகும்.





                      

Tuesday, 7 October 2014

ஏழுமலையான்




                  ஏழுமலையான் 


                          பல்லவி

                 எங்கும் நிறைந்திருக்கும் ஏழுமலையானை

                 பங்கய நாபனை மனமாரத் துதித்தேன்

                            அனுபல்லவி

                 சங்கும் சக்கரமுமேந்தும்  கேசவனை

                 மங்கையலமேலு கரம் பிடித்த மாதவனை

                              சரணம்

                 தங்கும் நிதியளிக்கும் திருமகளைத் தன் மார்பில்

                 தாங்கும் தயாபரனை திருவேங்கடமுடையானை

                 சங்கடம் களைந்து மங்களம் தந்திடும்

                 செங்கண்மாலை  வைகுண்ட வாசனை 

அம்பிகை பாலன்





                  அம்பிகை பாலன் 


                      பல்லவி

         கொம்பொன்றுடைந்தவனை தும்பிமுகப் பெருமானை

          அம்புலிபிறையணிந்தவனை மனமாரத் துதித்தேன்

                     அனுபல்லவி

            உம்பரும் முனிவரும் நந்தியும் கணங்களும்

            அம்புய மலரமர் பிரமனும் வணங்கிடும்

                         சரணம்

            நம்பித் துதிப்பவர்க்கு இன்பமளித்திதிடும்

            அம்புய பதத்தானை லம்போதரனை

           அம்பிகை பாலனைக் கேசவன் மருகனை                                                                                

            வெம்பவக்கடல் கடக்க உதவிட வேண்டுமென



குங்கும கணபதி


          குங்கும கணபதி 


              பல்லவி

          அங்கம் முழுவதும் குங்குமம் பூசிய

          துங்கக் கரிமுகனை மனமாரத் துதித்தேன்

               அனுபல்லவி

          திங்கள் பிறை யணிந்த ஆனைமுகத்தோனை

          பங்கய பதத்தானைக்  கேசவன் மருகனை

                 சரணம்

           எங்கும் நிறைந்திருக்கும் ஏகதந்தனை

           பொங்கரவணிந்த சங்கரன் மகனை

            இங்குமங்குமலைபாயும் மனக்குரங்கை யடக்கி

            பொங்கும் மூவாசைப் பிணிதனைக் களைந்திட

         

         


Monday, 6 October 2014

கீழ்க் கட்டளை பத்மாவதித் தாயார்





         கீழ்க் கட்டளை  பத்மாவதித் தாயார் 


                       பல்லவி

                 காண வேண்டுமென விரும்பினேன் - கீழ்க்

                 கட்டளையில் கோயில் கொண்ட அன்னை பத்மாவதியை

                        அனுபல்லவி

                 ஆணழகன் கேசவன் மனங்கவர் நாயகியை

                 வேணுகோபாலன் மார்பிலுறை திருமகளை

                            சரணம்

                  மாணிக்கம் வைரம் மணி மாலை யணிந்த

                  வாணுதலை  வளைக்கர அழுகுடையாளை

                  மாணப் பெரிய மலைமுலையுடையாளை

                  நாண்மகிழிருக்கையில் அமர்ந்திருப்பவளை






                  

ஸ்ரீ பத்மநாபன்



               ஸ்ரீ பத்மநாபன் 


                      பல்லவி

           காத்தருள்வாய்   ஸ்ரீ  பத்மநாபா

           பாற்கடல் வாசனுன்னை மனமாரத் துதித்தேன்

                      அனுபல்லவி

            பூத்திருக்கும் கமலமலரமர் பிரமனும்

            கூத்தனும் தேவரும் பணிந்திடும் கேசவா

                         சரணம்

             சாத்திர புராணமும் வேதாகமங்களும்

             நாற்கவியும் போற்றும் மதுசூதனனே

             பார்த்தனின் நேசனே பரம தயாளனே

             நாற்றிசையும் புகழ் விளங்கும் நாராயணனே

           

     





Sunday, 5 October 2014

அனந்தமங்கலம் ஸ்ரீ வாசுதேவன்


               அனந்தமங்கலம் ஸ்ரீ வாசுதேவன் 

   
                    பல்லவி

                 தேவாதி தேவனை ஸ்ரீ வாசுதேவனை

                  மூவாசைப் பிணி நீங்க மனமாரத் துதித்தேன்

                    அனுபல்லவி
   
                  தேவியர் பாமா ருக்மிணி உடனிருக்கும்

                   காவலனைக் கேசவனை கலியுக வரதனை

                         சரணம்

                   தேவரும் நாரதரும் சுக சனகாதியரும்

                    பூவிலமர் நான்முகனும் மாருதியும் வணங்கிடும்

                   தேவகி மைந்தனை  தீனசரண்யனை

                   பூவுலகோர் போற்றும் அனந்த மங்கலம்தன்னில்

                 

சிறிய/பெரிய கணபதி


                      சிறிய/பெரிய  கணபதி 


                                பல்லவி

          பெரியவனும் நீயே சிறியவனும் நீயே

          கரிமுகனுந்தன் திருவடி சரணம்

                             அனுபல்லவி

            திரிபுரமெரித்த பரமனின் மகனே

            அரிநாராயணன் கேசவன் மருகனே

                              சரணம்

             சரி நிகர் சமானமில்லாதவனே

             வறியவர்க்கருளும் கருணாகரனே

             மரித்தலும் பிறத்தலும் இல்லாத நிலைபெற

             பரிந்தருள் புரிந்தெனை ஆண்டருள்வாயே 

மூஞ்சூறு வாகனன்



            மூஞ்சூறு வாகனன் 


                        பல்லவி 

             அருள் மிகு கரிமுகனை மூஞ்சூறு வாகனனை 

              இருகரம் கூப்பி மனமாரத் துதித்தேன் 

                         அனுபல்லவி 

                அருந்தவ முனிவரும் அமரரும் வணங்கிடும் 

                திருமுருகன் தமையனை  கேசவன் மருகனை 
                
                            சரணம் 

                 கருணை மழை பொழியும் கமலாம்பிகை மகனை 

                  திருகமலாலயம் குளத்தருகே வீற்றிருக்கும் 
                   
                 பெருமைக்குரிய மாற்றுரைத்த கஜமுகனை 

                  திருவாரூர் வளர் வாதாபி கணபதியை 

                  

Saturday, 4 October 2014

ஸ்ரீ ஸ்ரீ லலிதா திரிபுர சுந்தரி



 

       ஸ்ரீ   லலிதா திரிபுர சுந்தரி 


                   பல்லவி

       ஒன்றாயும்  பலவாயும் நின்று காட்சிதரும்

       குன்றாத புகழ் மேவும் ஈஸ்வரியை  பணிந்தேன்

         அனுபல்லவி

        கன்றைக் காத்திடும்  தாய்ப் பசுவாயென்னை

        நன்றாகக் காத்தருளும்  ஆதி பராசக்தியை

           சரணம்

         அன்றாடம் படைத்தல் காத்தல ழித்தலென

          மூன்று தொழில் புரிந்திடும் முப்பெருந்தேவியை

          பொன் மலையில் வீற்றிருக்கும் கேசவன் சோதரியை

          அன்னை ஸ்ரீ லலிதா திரிபுர சுந்தரியை