Monday, 14 April 2014

சின்னக்கண்ணன்


சின்னக்கண்ணன் 

பல்லவி 

சின்னக் கண்ணனை சிங்காரவண்ணனை 

சென்ன கேசவனை மனமாரத்துதிதேன் 


அனுபல்லவி 

கன்னங்கருநிறத்துக் கன்னலைத்தெளிதேனை 

பொன்னெழில் மேனியனை ஆயர்குலவிளக்கை 


சரணம் 

புன்னகை தவழும் பூமுகமும் பீலியும் 

சின்னக்கொண்டையும் முத்துமணி மாலையும் 

மென்மலர்கரங்களில்வண்ணப் புல்லாங்குழலும் 

மின்னும் கண்களில் கூத்தாடும் குறும்புடனே   (சின்ன )


பொன்வளையும் குண்டலமும் தண்டைகளும் கால்சிலம்பும் 

இன்னும் மணியாரங்களும்  பொன்கழுத்தை யலங்கரிக்க 

மன்னுபுகழ் மாதவனை கோகுலத்து மணிவிளக்கை 

        பன்னக சயனனை மண்ணையுண்ட வாயனை (சின்ன) 




















No comments:

Post a Comment