Wednesday, 2 April 2014

ஸ்ரீ மஹாகணபதி

 

                            ஸ்ரீ மஹாகணபதி

               பல்லவி

 பிறவிப்பிணியகற்றும் மகாகணபதியை

 மறவாத மனம் வேண்டி மனமாரத்துதித்தேன்

               அனுபல்லவி

 அறம் பொருளின்பமனைத்தையுமளிப்பவனை

 அறவோர் பணிந்திடும் ஆனைமுகத்தோனை

                 சரணம்

 குறமகள் வள்ளியும் குமரனும் திருமண

 உறவு கொள்ள உதவிய வேழமுகத்தோனை

 குறைந்த கொம்பொன்றுடைய கரிமுகனை

 மறைபுகழ் சுமுகனை கேசவன் மருகனை






No comments:

Post a Comment