ஸ்ரீ வரசித்தி விநாயகர்
பல்லவி
அள்ளக்குறையாத வெள்ளமெனக்கருணை
அள்ளித்தரும் பிள்ளையாரை மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
பிள்ளையென எனைப்போற்றி தாயாகக்காக்கும்
கொள்ளை யழகுடைய கேசவன் மருகனை
சரணம்
உள்ளமெனும் கூடத்தில் ஊக்கமெனும் தூண் நட்டு
தள்ளரிய அன்பென்னும் சங்கலியால் கட்டி
வள்ளலவன் திருவடியை நீங்காமல் பற்றி
முள்ளாக உறுத்தும் வினைப்பயன்கள் தொலைந்திட
No comments:
Post a Comment