வினைதீர்க்கும் கரிமுகன்
பல்லவி
அனைத்துக்கும் முதலான ஆனைமுகத்தோனை
வினைதீர்க்கும் நாயகனை மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
நினைத்த காரியம் தடையற நடந்திட
அனைவரும் முதலில் வணங்கிடும் கரிமுகனை
சரணம்
அனங்கனைப் பழிக்கும் பேரழகுடையவனை
அனந்தசயனன் கேசவன் மருகனை
அனல் புனல் மதியணிந்த சங்கரன் மகனை
எனையாண்டருளென மலர்ப்பதம் பணிந்து
No comments:
Post a Comment