.
வாதாபி கணபதி
பல்லவி
ஆரூர் வளர் ஸ்ரீ வாதாபி கணபதியை
ஆனைமுகத்தோனை மனமாரத்துதித்தேன்
துரிதம்
அரனயனரியும் நந்தியும் கணங்களும்
முனிவரும் தேவரும் முருகனும் வணங்கிடும்
அனுபல்லவி
பாரோர் புகழ்ந்தேத்தும் கேசவன் மருகனை
காரமர் மேனியனை இடர் நீக்கும் கரிமுகனை
துரிதம்
அரவும் மதியும் அணிந்திருப்பவனை
திரிகோணத்தின் நடுவிருப்பவனை
சரணம்
தீராவினைதீர்க்கும் தீனசரண் யனை
மூலாதார மூர்த்தியை ஐங்கரனை
ஊருலகம் போற்றும் கும்பமுனிக்கருளும்
சீரும் சிறப்பும் மிகு ஓங்கார வடிவினனை
துரிதம்
தாமரைக்கரங்களில் பாசாங்குசமும்
கரும்பும் பழங்களும் ஏந்தியிருக்கும்
பல்லவி
வாதாபி கணபதிம் பஜேஹம் வாரணாஸ்யம் வரப்ரதம் ஸ்ரீ
அனுபல்லவி
பூதாதி ஸம்ஸேவித சரணம் பூதபௌதிக ப்ரபஞ்ச பரணம் வீதராகிணம் வினதயோகினம் விச்'வகாரணம் விக்னவாரணம்
சரணம்
பூராகும்ப ஸம்பவ முனிவரப்ரபூஜிதம் த்ரிகோண மத்யகதம்
முராரி ப்ரமுகாத்யுபாஸிதம் மூலாதார §க்ஷத்ரஸ்திதம்
பராதி சத்வாரி வாகாத்மகம் ப்ரணவஸ்வரூப வக்ரதுண்டம்
நிரந்தரம் நிடில சந்த்ரகண்டம் நிஜவாமகர வித்ருதேக்ஷ¤தண்டம்
கராம்புஜபாச'பீஜாபூரம் கலுஷவிதூரம் பூதாகாரம்
ஹராதிகுரு ஹதோஷித பிம்பம் ஹம்ஸத்வனி பூஷித ஹேரம்பம்
பொருள்:
யானை முகம் கொண்டவராகவும் வரங்களைக் கொடுக்கின்றவராகவும் விளங்கும் வாதாபி கணபதியை நான் பஜனை செய்கிறேன்.
பூதகணங்களால் வணங்கப்பட்ட திருவடிகளை உடையவர்.
பூமி, நெருப்பு, காற்று, நீர், ஆகாசம் ஆகிய ஐம்புதங்களையும் அவற்றாலான மற்ற உலகங்களையும் தரிப்பவர். ஆசையில்லாதவர்.
வணங்கப்படும் யோகியவர்களை உடையவர்.
உலகங்களுக்குக் காரணபூதர்.இடையூறுகளைப் போக்கடிப்பவர்.
முன்காலத்தில் கும்பசம்பவர் எனப்படும் அகஸ்தியர் என்னும் சிறந்த முனிவரால் பூஜிக்கப்பட்டவர்.
மூன்று கோணங்களுடன் கூடிய யந்திரத்தின் நடுவில் இருப்பவர்.
விஷ்ணு முதலிய முதல்வர்களால் தியானிக்கப்பட்டவர்.
மூலாதார §க்ஷத்திரமான திருவாரூரில் இருப்பவர்.
பரா, பச்யந்தி, மத்யமா, வைகரீ ஆகிய நான்கு வித வாக்கு சொரூபமாக இருப்பவர்.
பிரணவ சொரூபமாக(ஓங்கார சொரூபமாக) வளைந்த முகத்தை உடையவர்.
எப்போதும் நெற்றியில் பிறை சூடியவர்.
தமது இடது கையில் வைத்திருக்கப்பட்ட கரும்புத்துண்டத்தை உடையவர்.
தாமரை போன்ற கையில் பாசக்கயிறு, கொய்யாப்பழம், மாதுளம்பழம், இவற்றை உடையவர்.
பாபமற்றவர்.
பூதம் போன்ற பெரிய உருவத்தை உடையவர்.
பரமசிவன் முதலியவர்களாலும் சிவகுருவாகிய முருகனாலும் சந்தோஷிக்கப்பட்ட சொரூபத்தை உடையவர். ஹம்சத்வனி ராகத்தில் இன்பமுறும் யானைமுகத்தோன்.

No comments:
Post a Comment