Saturday, 5 April 2014

இடகுஞ்சி கணபதியே சரணம்


இடகுஞ்சி கணபதியே சரணம் 

ॐ गं इडगुञ्जि गणपतये नमः |

பல்லவி 

சரணம் சரணம் இடகுஞ்சி கணபதியே

 சரணமுனதிரு மலர்ப் பதம்  சரணம் 

அனுபல்லவி 

நரர்சுரரும் நான்முகனும் நந்தியும் கணங்களும் 

சுரபதியும் முனிவரும் கரம் பணிந்தேத்துமுன் 

சரணம்

பரம்பொருள் நீயே பரமசிவன் மகனே 

கரன்முரனையழித்த கேசவன் மருகனே 

மரணம் பிறப்பெனும் மாயச்சுழலறுக்க  

வரம் தர வேண்டுமென மனமாரத்துதித்தேன் 






  




No comments:

Post a Comment