Wednesday, 2 April 2014

வலஞ்சுழி விநாயகன்


வலஞ்சுழி விநாயகன் 

பல்லவி 

அருள் தருமழகிய ஆனைமுகத்தோனை 

  இரு கரம் கூப்பி மனமாரத்துதித்தேன்  


அனுபல்லவி 

திருத்தங்கும் திருமார்பன் கேசவன் மருகனை 

பெருவயிறு படைத்தவனைக் கருணாமூர்த்தியை 

சரணம் 

உருகித்துதித்திடும் பக்தருக்கெல்லாம் 

அருட்கரம் நீட்டி அரவணைக்கும் கரிமுகனை 

பெருமைக்குரிய உமையவள் மைந்தனை 

திருவலஞ்சுழி வெள்ளை வாரண முகனை  




















                                

No comments:

Post a Comment