குருவாயூர் கேசவன்
பல்லவி
குருவாயுரப்பனை மனமாரத்துதித்தேன்
ஏகாதசி நாளில் மலரிட்டுத்தொழுது
அனுபல்லவி
கருணைக்கடலான மாதவனைக் கேசவனை
வருந்துயர் நீக்கிடும் கலியுக வரதனை
சரணம்
ஒருநேரமாகிலும் திருமுகதரிசனம்
அருகிருந்து காணவே ஆவலுடன் நின்றேன்
கருநிறக் கண்ணனவன் புல்லாங்குழலில்
வருமிசை கேட்கவே திருவடி பணிந்து
No comments:
Post a Comment