வரங்கள் தந்திடும் ஸ்ரீ கணேசனை
கரம்பணிந்து நாம் தினமும் போற்றுவோம்
சரணம் கணபதி பாதம் சரணம் கணபதி
சரணம் கணபதி பாதம் சரணம் கணபதி
பிரணவ மூர்த்தியே நாத சோதியே
புரமெரித்தவன் கொஞ்சும் பிள்ளையே
அறத்தையோதிடும் முனிவர் நேயனே
பிறப்பிறப்பினை அறுக்கும் தேவனே
சரணம் கணபதி பாதம் சரணம் கணபதி
சரணம் கணபதி பாதம் சரணம் கணபதி
கரமலர்களில் கயிறு மீட்டியும்
வரமுமேந்திடும் ஸ்ரீ கணாதிபா
வினைகள் தீர்த்திடும் வீர வேழமே
இடர்களைந்திடும் சக்தி மைந்தனே
சரணம் கணபதி பாதம் சரணம் கணபதி
சரணம் கணபதி பாதம் சரணம் கணபதி
ஒற்றை க்கொம்பனே பேழை வயிறனே
பற்றறுத்திடும் எளிய கடவுளே
பற்றுமடியவர் கற்றறிந்தவர்
நற்றவத்தினர் ஏத்தும் தெய்வமே
சரணம் கணபதி பாதம் சரணம் கணபதி
சரணம் கணபதி பாதம் சரணம் கணபதி
மோதகப்ரியன் ஐந்து கரத்தினன்
வேதநாயகன் ஆனை முகத்தினன்
ஆதிகேசவன் போற்றும் மருமகன்
கீத வாத்தியம் விரும்பும் கரிமுகன்
சரணம் கணபதி பாதம் சரணம் கணபதி
சரணம் கணபதி பாதம் சரணம் கணபதி
அரசமரத்தின் கீழ் வீற்றிருப்பவன்
கருணை நிறைந்தவன் முருகசோதரன்
அருகம் பில்லையும் எருக்கம் மாலையும்
விரும்பி ஏற்றிடும் விக்ன நாயகன்
சரணம் கணபதி பாதம் சரணம் கணபதி
சரணம் கணபதி பாதம் சரணம் கணபதி
No comments:
Post a Comment