கற்பகாம்பிகை
பல்லவி
அம்பிகையை அருள் வேண்டி மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
உம்பரும் முனிவரும் நான்முகனுமிந்திரனும்
தும்புரு நாரதரும் கரம் பணிந்தேத்தும்
சரணம்
அம்புலி பிறையணிந்த சங்கரியை ஈச்வரியை
நம்புமடியார்க்கு இன்பமளிப்பவளை
அம்புய நாபன் கேசவன் சோதரியை
வெம்பவக்கடலினைக்கடந்திட எனக்குதவ
No comments:
Post a Comment