@ Melbourne’s alleyways, beautiful graffiti artwork of Ganesha
கணபதி துதி
கணபதி உனையே தினம் பணிந்தேனே
இணையடி நிழலே துணை எனக் கென்றும்
தணலினை நெற்றியில் வைத்தவன் மகனே
குணமளிப்பவனே குறைதவிர்ப்பவனே
அணங்குகள் சித்தியும் புத்தியும் என்றும்
பணிந்திடும் பங்கய பதமுடையவனே
பிணங்கிய வள்ளியை வடிவேலனுக்கு
மண முடித்திடவே உதவிய சுமுகனே
கணங்களும் நந்தியும் தேவரும் முனிவரும்
வணங்கிடும் தேவனே கேசவன் நேசனே
மணம்தரும் இனிய மலர் மாலைகளுடன்
மணிமாலை பொன்மாலையணிந்திருப்பவனே
துணையெனத் துதித்திடும் அடியவர்க்கெல்லாம்
பணம் புகழ் பதவி அளித்திடும் வள்ளலே
வணங்கிடும் எனையே காத்தருள்வாயே
.
No comments:
Post a Comment