அஞ்சுகரத்தான்
பல்லவி
அஞ்சுகரத்தானை தஞ்சமடைந்தேன் .
அஞ்சானெனஞ்சனை தந்திமுகத்தோனை
அனுபல்லவி
வெஞ்சமரில் ஆனை முகத்தரக்கனை
துஞ்சிடச்செய்த குஞ்சரமுகனை
சரணம்
பஞ்சபாணப்பயிரவி உமையும்
நஞ்சுண்ட கண்டனும் கொஞ்சிடும் மகனை
கஞ்சனைக்காய்ந்த கேசவன் மருகனை
நெஞ்சாரத் துதித்து பதமலர் பணிந்து
.
No comments:
Post a Comment