கணபதி
பல்லவி
என்ன சொல்லிப்பணிவேன் கணபதியை
முன்னைப்பழம் பொருளை மூவாசை களைபவனை
அனுபல்லவி
சென்னகேசவன் மருகனை கரிமுகனை
தன்னடி துதிப்போர்க்கு இன்னருள் புரிபவனை
சரணம்
இன்னலிடர் நீக்கும் விக்னவினாயகனை
பன்னகாபரணன் பரமசிவன் மகனை
கன்னலைத் தேனை கலியுக வரதனை
தன்னிகரில்லாத தேவனை சுமுகனை
No comments:
Post a Comment