Friday, 4 April 2014

கருநிற க்கண்ணன்



கருநிற க்கண்ணன்

கண்ணனை க்கருநிற வண்ணனை  மழலை

புன்னகையில்  கண்டு ஆனந்தம் கொண்டேன்


பண்ணிசை ஒலிக்கும் குழலின் ஓசையை

சின்னஞ்சிறாரின் சிரிப்பில் கேட்டேன்


எண்ணங்களில் எதுவும் கள்ளமில்லாத

வண்ணக்குழந்தைகளின் மின்னும் கண்களில்  

எண்ணிலாக்கனவுகளின் எதிர்காலம் கண்டவை

நிறைவேற வேண்டுமெனக்  கண்ணனைத்துதித்தேன்  


No comments:

Post a Comment