Thursday, 17 April 2014

தூம கேது கணபதி



தூம கேது கணபதி 

தூம கேது கணபதியைப் பணிந்தேன் 

தோஷங்கள் நீங்கவும் நன்மைகள் ஓங்கவும் 

துரிதம் 

காமனும் கணங்களும் நரர்சுரர் நந்தியும் 

அமரேந்திரனும்  பிரமனும் துதித்திடும் 

அனுபல்லவி 

தாமரை நாபன் கேசவன் மருகனை 

மாமறைகள் போற்றும் வேழமுகத்தோனை 

சரணம் 

தாமமெருக்கணிந்த வாரண முகனை 

ஓமெனும் பொருளை விக்னவினாயகனை 

மாமயிலேறிடும் சரவணன் தமையனை 

நாமம் பல பாடிமனமாரத்துதித்து 

துரிதம் 

பாமரர் பண்டிதர் கன்னியரெழுவர் 

நாமகள் பூமகள் மலைமகள் கோள்கள் 

பூமண்டலத்துறை அனைவரும் வணங்கிடும்

 தாமரைப் பாதனை ஆனைமுகத்தனை 


.




























No comments:

Post a Comment