Thursday, 3 April 2014

உமைமகன்


   உமைமகன் 

 பல்லவி

கோயிலில் வீற்றிருந்து காட்சிதரும் கணபதியை

பாயிரம் பல பாடி மகிழ்ந்தேன்--  என் மன

அனுபல்லவி

தாயெனவே நினைத்து தஞ்சமடைந்தேன்

சேயெனைக் காத்தருள வேண்டுமெனத்துதித்தேன்

சரணம்

ஆயிரம் பெயருடைய கேசவன் மருகனை

தீயினை ஏந்தும் நெற்றிக்கண்ணன் மகனை

ஞாயிறும் திங்களும் கணங்களும் பணிந்தேத்தும்

தூயனை உமைமகனை தும்பிமுகப்பெருமானை
















No comments:

Post a Comment