Sunday, 6 April 2014

மதுர கீதம்



மதுர கீதம் 

பல்லவி 

மதுர கீதம் கேட்டு மயங்கினேன் 

பதுமநாபன்  கேசவன் உனது 

அனுபல்லவி 

அதரம் வைத்து புல்லாங்குழலில் 

விதம் விதமாக நீ வாசிக்கும் இன்னிசை 

சரணம் 

எதிர் நின்ற கறவைகள் நிலைத்து நிற்கவும் 

மதுவுண்ணும் வண்டுகள்  பறவைகள்  விலங்குகள் 

எதுவுமசையாது தமைமறந்திருக்கவும் 

புதுவிதமான அனுபவமளிக்குமுன் 







No comments:

Post a Comment