.
பொன்வண்ண கணபதி
பல்லவி
பொன்வண்ண கணபதியை வேழமுகத்தோனை
முன் நின்று கண்டு மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
தன்னிகரில்லாத தனிப்பெருந்தேவனை
பன்னக சயனன் கேசவன் மருகனை
சரணம்
பொன்னம்பலவாணன் பரமசிவன் மகனை
இன்னலிடர் களையும் ஆனைமுகத்தோனை
அன்னையும் தந்தையுமே அகிலமனைத்துமென
முன்னின்ற னைவருக்குமுணர்த்திய கரிமுகனை
No comments:
Post a Comment