ஜானகிராமன்
பல்லவி
ஜானகியின் கரம்பிடித்த புருஷோத்தமனை
ஜானகிராமனை மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
கூனியின் சூழ்ச்சியால் கைகேயி சொல்கேட்டு
கானகம் சென்ற அயோத்தி ராமனை
சரணம்
தானெனுமகந்தையால் அன்னையை சிறைபிடித்து
ஈனச்செயல் புரிந்த அரக்கனையழித்தவனை
வானவர் நரர்சுரர் முனிவர்கள் வணங்கிடும்
தீனசரண்யனை மாதவனை கேசவனை
No comments:
Post a Comment