துதிக்கையன்
பல்லவி
துதிப்பவர்க்கருளும் துதிக்கையனை
கதியெனப் பணிந்து மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
எதிர்வரும் தடைகளை வினைகளை யகற்றும்
கதிர் வேலன் சோதரனை கேசவன் மருகனை
சரணம்
கதிரவனை விடவும் ஒளிமிகுந்தவனை
மதியணிந்தவனை மதவாரணமுகனை
எதுவும் தொடங்கும் முன் அனைவரும் வணங்கிடும்
முதன்மைக் கடவுளை மகாகணபதியை
No comments:
Post a Comment