வெற்றிலை கணபதி
பல்லவி
வெற்றியளித்திடும் வெற்றிலை கணபதியை
ஒற்றைக் கொம்பனை மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
பற்றறுத்திட மனம் பதப்படச் செய்திட
உற்ற துணை அவனெனவே திருவடி பணிந்து
சரணம்
சுற்றித் திரிந்தேன் பிழை பல புரிந்தேன்
கற்றுத் தெளிந்தபின் மனம் திருந்தி
நெற்றிக்கண்ணன் மகனை கேசவன் மருகனை
.கற்றிடுமடியவர் புத்தியிலுரைபவனை
No comments:
Post a Comment