Sunday, 20 April 2014

பாவமன்னிப்பு



பாவமன்னிப்பு 

மழைக்குக்கூட 

பள்ளியில்  ஒதுங்காத 

மழலைச்செல்வங்கள் 

பிழைக்க வழியிதுவென 

உழைக்கக்கிளம்பிவிட்ட 

வறுமைக்கோட்டின் 

அடையாளங்கள் 

எழுதத் தெரிந்த எனக்கு 

வழிகாட்ட தெரியவில்லை 

வெட்கித்தலைகுனிகிறேன்

பரமபிதாவே  

மன்னியுங்கள் 


No comments:

Post a Comment