Wednesday, 30 April 2014
Tuesday, 29 April 2014
Monday, 28 April 2014
சித்திர கணபதி
சித்திர கணபதி
பல்லவி
சித்திர வடிவினில் எழுந்தருளிக் காட்சிதரும்
உத்தமி புதல்வனை கணபதியைத்துதித்தேன்
அனுபல்லவி
முத்தமிழ் வித்தகர் அவ்வையகத்தியர்
நித்தமும் போற்றிப் பணிந்திடும் கரிமுகனை
சரணம்
நற்றவ முனிவரும் கற்ற றிந்தவரும்
சித்தத்தில் வைத்து இணை யடி போற்றும்
பித்தன் சிவன் மகனை கேசவன் மருகனை
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்டவனை
Sunday, 27 April 2014
கப்பிய கரிமுகன்
கப்பிய கரிமுகன்
பல்லவி
முப்புரமெரிசெய்த முக்கண்ணன் மகனை
கப்பிய கரிமுகனை மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
துப்புரவுடனே அகம் புறம் துலக்கி
அப்பமோடவல்பொரி கனிகளும் படைத்து
சரணம்
முப்பொழுதும் தவம் செய்திடும் முனிவரும்
சுப்பிரமணியனும் தேவரும் கணங்களும்
இப்பிரபஞ்ச மக்களும் வணங்கிடும்
ஒப்பிலாமணியைக் கேசவன் மருகனை
Saturday, 26 April 2014
Thursday, 24 April 2014
Wednesday, 23 April 2014
பரமேச்வரி மகன்
பரமேச்வரி மகன்
பல்லவி
பார் புகழ் கரிமுகனை பரமேச்வரி மகனை
நேர் நின்று கரம் கூப்பி மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
கார்வண்ண மேனியன் கேசவன் மருகனை
கார்த்திகேயன் சோதரனை கணபதியை
சரணம்
நாற்கவிகள் போற்றும் நாத வடிவினனை
பூரணம் பொதிந்த மோதகப் பிரியனை
காரமர் மேனியனைக் கருணாமூர்த்தியை
ஆர்வமுடனெனையே ஆண்டருளவேண்டுமென
நிழலும் நிஜமும்
நிழலும் நிஜமும்
மலரெனச்சிரிக்கும் மழலையின் சிரிப்பில்
பலநிறம் கண்டு மனம் களிப்படைந்தேன்
புலரும் விடியலின் ஒளியினைக்கண்டேன்
அலைகளின் ஓசையும் அழகும் கண்டேன்
கள்ளமற்ற உள்ளம் கண்டேன்
கலைகளையளித்திடும் நாமகள் கண்டேன்
முத்துக்கள் வரிசையும் மல்லிகைச்சரமும்
புத்தொளியுடனே மின்னுதல் கண்டேன்
மலைமகள் அலைமகள் வடிவம் கண்டேன்
புள்ளி மயிலின் கோலம் கண்டேன்
துள்ளித்திரியும் மானைக்கண்டேன்
மெள்ள மடிவைத்துக் கொஞ்சத்துடித்தேன்
அள்ளி அணைத்திட ஆவல் கொண்டேன்
கண்டது நிழற்படம் என்பதுணர்ந்து
மெல்லத் தெளிந்து பாடல் புனைந்தேன்
Tuesday, 22 April 2014
Monday, 21 April 2014
வலம்புரி விநாயகன்
வலம்புரி விநாயகன்
பல்லவி
வலம்புரி கணபதியை மனமாரத்துதித்தேன்
அரச மரத்தடியே அமர்ந்து காட்சி தரும்
அனுபல்லவி
நிலம் நீர் நெருப்பு காற்று வெளி என்று
ஐந்துமாய் நிற்கும் கேசவன் மருகனை
சரணம்
புலன்களையடக்கும் உபாயம் பெறவும்
மலம் ஒரு மூன்றின் மயக்கம் அறுக்கவும்
உலகில் இனியும் பிறவாதிருக்கவும்
தலம் வந்து வலம் வந்து தாளினைப் பணிந்து
தும்பிமுகப்பெருமான்
தும்பிமுகப்பெருமான்
பல்லவி
கடைக்கண் பார்த்தெனைக்காத்தருள்வாய்
அடைக்கலம் நீயே ஆனைமுகத்தோனே
அனுபல்லவி
தடைகளை நீக்கும் விக்ன விநாயகனே
இடை குலத்துதித்த கேசவன் மருகனே
சரணம்
நடையழகுடைய வேழமுகத்தோனே
இடையினில் அரவணிந்த பொன்மலர்ப்பாதனே
விடைவாகனன் மகனே தும்பிமுகப்பெருமானே
குடையின் கீழமர்ந்திருக்கும் குணநிதியே கரிமுகனே
Sunday, 20 April 2014
மூலாதாரமூர்த்தி
மூலாதாரமூர்த்தி
பல்லவி
மூலாதார மூர்த்தியை கணபதியை
காலாந்தகன் மகனை மனமாரத்துதிதேன்
அனுபல்லவி
வேலாயுதனும் கணங்களும் நந்தியும்
நீலவண்ணன் கேசவனுமமரரும் போற்றும்
சரணம்
நூலணிந்த திருமார்பும் பொன்னரை ஞாணும்
காலிரண்டில் சிலம்பும் பூந்துகிலு மணிந்து
லீலைகள் பலபுரிந்த பால விநாயகனை
பூலோகம் புகழ்ந்தேத்தும் வேழமுகத்தோனை
பார்வதி மைந்தன்
பார்வதி மைந்தன்
பல்லவி
மாதா பார்வதியின் மைந்தனை கணபதியை
நீதான் கதியென மனமாரத்துதித்தேன்
துரிதம்
இடர் பிணி கவலை பவபயன் வினைகள்
அனைத்தையும் களை ந்திடும் ஐந்து கரத்தனை
அனுபல்லவி
பாதாரவிந்தம் பணிந்திடும் பக்தருக்கு
ஆதரவளித்திடும் ஆனை முகத்தோனை
சரணம்
மோதகமும் அங்குச பாசமுமேந்திடும்
வேதங்கள் போற்றும் கேசவன் மருகனை
பூதகணங்களும் நந்தியும் அமரரும்
பூதலத்தோரும் பணிந்தேத்தும் கரிமுகனை
.
Saturday, 19 April 2014
சித்தி விநாயகன்
.
சித்தி விநாயகன்
பல்லவி
.கணபதியை துணையென மனமாரத்துதித்தேன்
அணங்குகள் சித்தியும் புத்தியும் உடனிருக்கும்
. அனுபல்லவி
அணையிட முடியாத கருணைவெள்ளமளித்திடும்
கண நாயகனைக் கேசவன் மருகனை
சரணம்
இணையென ஒருவரும் இல்லாத தேவனை
கணங்களின் அதிபதியை காரமர் மேனியனை
தணலேந்தும் முக்கண்ணன் சிவபெருமான் மகனை
அணைத்தெனை யாண்டருள வேண்டுமெனத்துதித்து
.
.
.
.
சித்தி விநாயகன்
பல்லவி
.கணபதியை துணையென மனமாரத்துதித்தேன்
அணங்குகள் சித்தியும் புத்தியும் உடனிருக்கும்
. அனுபல்லவி
அணையிட முடியாத கருணைவெள்ளமளித்திடும்
கண நாயகனைக் கேசவன் மருகனை
சரணம்
இணையென ஒருவரும் இல்லாத தேவனை
கணங்களின் அதிபதியை காரமர் மேனியனை
தணலேந்தும் முக்கண்ணன் சிவபெருமான் மகனை
அணைத்தெனை யாண்டருள வேண்டுமெனத்துதித்து
.
.
.
.
Friday, 18 April 2014
வரகூர் வெங்கடேசப்பெருமாள்
வரகூர் வெங்கடேசப்பெருமாள்
பல்லவி
வரகூர் தலத்துறையும் ஸ்ரீ வெங்கடேசனை
சிரம் தாழ்த்தி கரம் கூப்பி மனமாரத்துதித்தேன்
துரிதம்
அரனயன் நரர்சுரர் நாரதர் சுரபதி
சுகசனகாதியர் கரம் பணிந்தேத்தும்
அனுபல்லவி
தரங்கிணி படைத்த நா ராயண தீர்த்தரும்
தாளம் கொட்டிய மாருதியும் வணங்கிடும்
சரணம்
வரம்தரும் கரமுமபயகரமும் காட்டும்
பரமனை பங்கய நாபனை மாலனை
திருமகள் நிலமகள் உடனிருந்து காட்சி தரும்
திருமாலை க்கேசவனை ஸ்ரீமன் நாராயணனை
.
சந்தன கணபதி
சந்தன கணபதி
பல்லவி
வந்தனை புரிந்தேன் சந்தன கணபதியை
சுந்தர வடிவினனை சுமுகனைக் கரிமுகனை
அனுபல்லவி
உந்தி கமலன் கேசவன் மருகனை
தந்தி முகத்தோனைக்கருணா மூர்த்தியை
சரணம்
பந்தபாசத் தளைகளை களைந்திட
எந்தனுக்குதவிடும் வேழ முகத்தோனை
நந்தியும் கணங்களும் தேவரும் முனிவரும்
சந்ததம் வணங்கிடும் வாரண முகனை
இந்தின் இளம் பிறை சூடிய ஐங்கரனை
வந்திப்பவர்க்கருள் தந்திடும் தேவனை
மந்திரப்பொருளான ஆனை முகத்தோனை
கந்தசோதரனை மனமாரத்துதித்து
Thursday, 17 April 2014
சரணம் கணபதி
வரங்கள் தந்திடும் ஸ்ரீ கணேசனை
கரம்பணிந்து நாம் தினமும் போற்றுவோம்
சரணம் கணபதி பாதம் சரணம் கணபதி
சரணம் கணபதி பாதம் சரணம் கணபதி
பிரணவ மூர்த்தியே நாத சோதியே
புரமெரித்தவன் கொஞ்சும் பிள்ளையே
அறத்தையோதிடும் முனிவர் நேயனே
பிறப்பிறப்பினை அறுக்கும் தேவனே
சரணம் கணபதி பாதம் சரணம் கணபதி
சரணம் கணபதி பாதம் சரணம் கணபதி
கரமலர்களில் கயிறு மீட்டியும்
வரமுமேந்திடும் ஸ்ரீ கணாதிபா
வினைகள் தீர்த்திடும் வீர வேழமே
இடர்களைந்திடும் சக்தி மைந்தனே
சரணம் கணபதி பாதம் சரணம் கணபதி
சரணம் கணபதி பாதம் சரணம் கணபதி
ஒற்றை க்கொம்பனே பேழை வயிறனே
பற்றறுத்திடும் எளிய கடவுளே
பற்றுமடியவர் கற்றறிந்தவர்
நற்றவத்தினர் ஏத்தும் தெய்வமே
சரணம் கணபதி பாதம் சரணம் கணபதி
சரணம் கணபதி பாதம் சரணம் கணபதி
மோதகப்ரியன் ஐந்து கரத்தினன்
வேதநாயகன் ஆனை முகத்தினன்
ஆதிகேசவன் போற்றும் மருமகன்
கீத வாத்தியம் விரும்பும் கரிமுகன்
சரணம் கணபதி பாதம் சரணம் கணபதி
சரணம் கணபதி பாதம் சரணம் கணபதி
அரசமரத்தின் கீழ் வீற்றிருப்பவன்
கருணை நிறைந்தவன் முருகசோதரன்
அருகம் பில்லையும் எருக்கம் மாலையும்
விரும்பி ஏற்றிடும் விக்ன நாயகன்
சரணம் கணபதி பாதம் சரணம் கணபதி
சரணம் கணபதி பாதம் சரணம் கணபதி
தூம கேது கணபதி
தூம கேது கணபதி
தூம கேது கணபதியைப் பணிந்தேன்
தோஷங்கள் நீங்கவும் நன்மைகள் ஓங்கவும்
துரிதம்
காமனும் கணங்களும் நரர்சுரர் நந்தியும்
அமரேந்திரனும் பிரமனும் துதித்திடும்
அனுபல்லவி
தாமரை நாபன் கேசவன் மருகனை
மாமறைகள் போற்றும் வேழமுகத்தோனை
சரணம்
தாமமெருக்கணிந்த வாரண முகனை
ஓமெனும் பொருளை விக்னவினாயகனை
மாமயிலேறிடும் சரவணன் தமையனை
நாமம் பல பாடிமனமாரத்துதித்து
துரிதம்
பாமரர் பண்டிதர் கன்னியரெழுவர்
நாமகள் பூமகள் மலைமகள் கோள்கள்
பூமண்டலத்துறை அனைவரும் வணங்கிடும்
தாமரைப் பாதனை ஆனைமுகத்தனை
.
Wednesday, 16 April 2014
மூளையெனப்படுவது யாதெனில்
மூளையெனப்படுவது யாதெனில்
அடங்கிய கருவூலத்தினுள் நுழையும்
கடவுச்சொல்லை தன்னுள் வைத்திருக்கும்
கடவுளால் படைக்கப்பட்ட
கருவி
உறவும் பகையும்
நிறமும் குணமும்
கருப்பும் வெள்ளையும்
இருப்பதும் இல்லாததும்
உணவும் உடலும்
அதனின் தொடர்பும்
பிரபஞ்சமும் நானும்
உள்ளும் வெளியும்
அனைத்தும் அறிய
படைத்தவன் படைத்த
கருவி
சத்தும் சித்தும்
ஆனந்தமும்
சித்திக்க உதவிடும்
மெய்ப்பொருளின் திறவுகோல்
Tuesday, 15 April 2014
Subscribe to:
Posts (Atom)