பலவிதமாயுன்னை.......
பல்லவி
பலவிதமாயுன்னை பாடி த்துதித்தேன்
நலமருள்வாயே ஶ்ரீ ஜெயராமா
அனுபல்லவி
உலகனைத்தும் படைத்தும் காத்தும் கேசவனே
நிலைநிறுத்தியும் லீலைகள் புரிபவனே
சரணம்
நிலமகள் சீதையை மணம் புரிந்த ராகவனே
நலந்தரும் நாமங்கள் பல உடையவனே
விலங்கெனத்திரிந்திடும் புலன்களனைத்துமொரு
நிலைபெற வேண்டி மலரடி பணிந்து
No comments:
Post a Comment