தேவரும் முனிவரும்......
பல்லவி
தேவரும் முனிவரும் தேவேந்திரனும்
யாவரும் வணங்கிடும் ராமா எனக்கருள்வாய்
அனுபல்லவி
சேவடி பணிந்திடுமடியார்க்கருள்பவனே
மூவுலகும் கொண்டாடும் திருமலே கேசவனே
சரணம்
கோவில் குளமென்று யாத்திரை புரிந்ததில்லை
நாவிலுன் நாமம்தனை தோத்திரம் செய்ததில்லை
பாவியேனின்று மனம் வருந்தித் திருந்தி
தூவி மலர் சொரிந்து உனதடி பணிந்தேன்
No comments:
Post a Comment