நாரதரிசையில்.........
பல்லவி
நாரதரிசையில் மனம் மயங்கிடும்
நாரணனே ராமா நீயெனக்கருள்வாய்
அனுபல்லவி
காரண காரியமனைத்தும் நீயே
ஆரணப் பொருளே ஆதி கேசவனே
சரணம்
பூரண சந்திரன் போல் பொலிவுடையவனே
மாரனையீன்றவனே மறை புகழ் மாயவனே
கோர சம்சாரக் கடலினைக் கடந்திட
வீர ராகவனே உனைச் சரணடைந்தேன்
No comments:
Post a Comment