தாமரைக் கண்ணனே........
பல்லவி
தாமரைக் கண்ணனே ஶ்ரீராமா
தூமலர் தூவியுன் பாதம் பணிந்தேன்
அனுபல்லவி
நேம நிஷ்டைகள் எதுவும் நான் செய்ததில்லை
நாம பஜனை யொன்றே செய்து துதித்தேன்
சரணம்
பாமரர் பண்டிதர் அனைவரும் துதித்திடும்
காமனைப் படைத்த கேசவனே ரகுராமா
பூமியில் ஜென்மம் எடுத்து சலித்தேன்
தாமதமின்றியே மோட்சம் தந்திடுவாய்
No comments:
Post a Comment