திருவுள்ளமிரங்காதா.......
பல்லவி
திருவுள்ளமிரங்காதா ஶ்ரீ ராமா
ஒரு தவறும் செய்யாத எனக்கருள உந்தன்
அனுபல்லவி
பெருமைக்குரிய திருவின் நாயகனே
அருமறைகள் போற்றும் தேசுடைய கேசவனே
சரணம்
குருவும் தந்தையும் தாயும் நீயெனவே
கருதி உனைத்துதித்தேன் கருமாமுகில் வண்ணா
கரும வினைப்பயனால் கட்டுண்ட என்னை
கருணையுடன் விடுவித்து காத்தருள வேண்டினேன்
No comments:
Post a Comment