வேறொரு தெய்வம்......
பல்லவி
வேறொரு தெய்வம் எனக்கில்லை உலகில்
ஆராவமுதே கேசவனே ஶ்ரீ ராமா
அனுபல்லவி
பூரணசந்திரனை பழிக்கும் முகமுடையவனே
நாரணனே நாற்கவி போற்றும் பேரழகே
சரணம்
பாரினில் உனக்கிணை வேறே யாருளர்
நீர்நிலை குளங்கள் சமுத்திரமாகுமோ
நாரதர் நான்முகன் நரர்சுரர் பணிந்திடும்
சூரிய குலத்தோனே மாரனைப் படைத்தவனே
No comments:
Post a Comment